Sivakarthikeyan: அயலான் படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு.. சிவகார்த்திகேயன் சொன்னத பாருங்க!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்த அயலான் படம் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்தப் படம் உருவாக 5 ஆண்டுகள் பிடித்துள்ள நிலையில் இன்று நேற்று நாளை படத்திற்கு ரவிக்குமார் இயக்கத்தில் அயலான் படம் இன்றைய தினம் ரிலீசாகியுள்ளது. முதல் படத்திலேயே சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்த ரவிக்குமார், இந்தப் படத்திலும் அதையே கதைக்களமாக கொண்டு சாதித்துள்ளார்.

நிதி பிரச்சினை, சிஜி வேலைகள் காலதாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளால் அயலான் படம் தாமதமான நிலையில், பழைய கதை என்ற பிரச்சினைக்குள் சிக்கி விடுமோ என்று பல்வேறு தரப்பினரும் பயந்த நிலையில், அதையெல்லாம் மீறி இந்தப் படத்தின் கதைக்களம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஏலியனை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் ரசிகர்களுக்கு விருப்பமானதாக மாறியுள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் ஏலியன் இணைந்து செய்யும் கலாட்டாக்கள் ரசிகர்களுக்கு விருந்தாகியுள்ளது.

Actor Sivakarthikeyan express his happiness about the response for Ayalaan movie

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கடந்த ஆண்டில் ரிலீசாகி ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது. இந்நிலையில் தற்போது அவர் கமல்ஹாசனின் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் இந்தப் படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துவரும் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து படம் கோடை கொண்டாட்டமாக அல்லது ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அயலான் படம்: இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக உருவாகிவந்த சிவகார்த்திகேயனின் அயலான் படம் இன்றைய தினம் பொங்கலையொட்டி ரிலீசாகியுள்ளது. இன்று நேற்று நாளை என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை கொடுத்து ரசிகர்களின் மனதை அள்ளிய ரவிக்குமார், அயலான் படத்திலும் அதே கதைக்களத்தை கையில் எடுத்து வெற்றிக்கொடி நாட்டியுள்ளார். முந்தைய படத்தில் டைம் டிராவல் கதையை சிறப்பாக சொன்ன அவர் அயலான் படத்தில் ஏலியனை மையமாக கொண்டு கதைக்களத்தை உருவாக்கி படத்தை அனைத்து தரப்பினரும் கொண்டாட செய்துள்ளார்.

தாமதமான ரிலீஸ்: படத்தில் சிவகார்த்திகேயன், பக்கத்து வீட்டு பையன் லுக்கில் அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவர்ந்துள்ளார். இந்தப் படத்தின் பிரமோஷன்களை படக்குழு சிறப்பாக செய்திருந்த நிலையில், தற்போது படம் அனைத்து தரப்பினரையும் சிறப்பாக சென்றடைந்துள்ளது. படத்தின் சிஜி வேலைகள் அதிகமான காலதாமதத்தை மட்டுமில்லாமல் நிதியையும் அள்ளிய நிலையில், படத்தின் ரிலீஸ் தொடர்ந்து தள்ளிப் போனது. நேற்றைய தினமும் உயர்நீதிமன்றத்தில் படத்திற்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீங்கியதை தொடர்ந்தே படத்தின் ரிலீஸ் உறுதியானது.

சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி பேட்டி: இந்நிலையில் இந்தப் படத்தின் வெற்றி சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இதனிடையே செய்தியளார்களிடையே பேசிய நடிகர் சிவகார்த்திகேயன், இன்று நேற்று நாளை படத்தை தொடர்ந்து இயக்குநர் ரவிக்குமாரின் அயலான் படத்தை திரையில் பார்ப்பது தனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை அளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். படத்திற்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் மிகப்பெரிய நன்றி என்றும் அவர் கூறியுள்ளார். படத்தை குடும்பத்துடன் திரையில் சென்று பார்க்கும்படியும் குழந்தைகளை அழைத்து செல்லவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இந்தப் படம் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X