Sivakarthikeyan: இன்ஸ்டாகிராமில் மாஸ் போட்டோஸ் வெளியிட்ட சிவகார்த்திகேயன்.. என்ன காரணம் தெரியுமா?
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் திரையுலக வெற்றி மிகவும் குறுகிய காலத்திலேயே சிறப்பாக அமைந்ததாக கூறலாம். விஜய் டிவியின் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தன்னுடைய பயணத்தை காமெடியனாக, சின்ன பட்ஜெட் படங்களின் ஹீரோவாக தொடங்கினார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து தன்னை தற்போது ஆக்ஷன் ஹீரோவாக வெளிப்படுத்தி வருகிகிறார். பாய் நெக்ஸ்ட் டோர் லுக்கில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வரும் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளராக அடுத்தடுத்த படங்களை வெற்றி படங்களாக கொடுத்து வருகிறார்.
டாக்டர் மற்றும் டான் படங்கள் இவரது தயாரிப்பில் மிகப்பெரிய அளவில் ரசிகர்களை ரீச் செய்து 100 கோடி கிளப்பிலும் இணைந்துள்ளது. கடந்த ஆண்டில் மாவீரன் படமும் கடந்த ஜனவரியில் அயலான் படமும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றி பட வரிசையிலும் இடம் பெற்றுள்ளது. இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் தன்னுடைய 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் சூட்டிங் விரைவில் நிறைவடையவுள்ளது. படத்திற்கு அமரன் என்று சமீபத்தில் சிலகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி டைட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் சின்னத்திரையில் இருந்து வெள்ளி திரைக்கு தாவியவர்களில் மிகவும் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். அவரது வளர்ச்சி குறுகிய காலத்திலேயே மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. நடிகர், தயாரிப்பாளர், பாடகர், பாடலாசிரியர் என பல்வேறு தளங்களில் பயணித்து வரும் சிவகார்த்திகேயன், தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் சூட்டிங் நிறைவு செய்யப்பட உள்ள நிலையில் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி முதல் முறையாக இணைந்துள்ளார்.
அமரன் படம்: இந்த படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வரும் சூழலில் அவர் ராணுவ வீரர் மற்றும் குடும்பத் தலைவன் என இரு வேறு கெட்டபுகளில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய ஏகே23 படத்தின் சூட்டிங்கில் ஏப்ரல் மாதத்தில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் அமரன் படத்தில் விறுவிறுப்பான கதைக்களத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீரியஸ் கேரக்டர்: முன்னதாக காமெடியை தன்னுடைய படங்களில் மிகச்சிறப்பான வகையில் சேர்த்து அதன் மூலமே ஏராளமான ரசிகர்களை கவர்ந்துவந்த சிவகார்த்திகேயனுக்கு, அமரன் படத்தில் காமெடி காட்சிகள் இல்லை என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இதனால் படத்தில் அவரது கெட்டப் மற்றும் நடிப்பு எப்படி அமையும் என்று தெரிந்து கொள்ள ரசிகர்கள் தற்போதே ஆர்வம் காட்டி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறார் சிவகார்த்திகேயன். தொடர்ந்து அடுத்தடுத்த பட அறிவிப்புகள், போட்டோஷூட் புகைப்படங்கள், குடும்பத்தினருடனான புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
7 மில்லியன் பாலோயர்கள்: கடந்த 2011ம் ஆண்டில் இன்ஸ்டாகிராமில் இணைந்த சிவகார்த்திகேயன், தொடர்ந்து ஆக்டிவாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இன்றைய தினம் அவர் ஏழு மில்லியன் ஃபாலோயர்களை தாண்டியுள்ளதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதையொட்டி அவர் மாஸான லுக்கில் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களின் உற்சாகப்படுத்தியுள்ளார். வித்தியாசமான பேக்கிரவுண்டில் இந்தப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. 7 மில்லியன் பாலோயர்களை ரீச் செய்ததற்காக அவர் இந்தப் பதிவில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











