RRR படவிழாவில் வலிமை படம் குறித்து பேச்சு... கைத்தட்டல் வாங்கிய சிவகார்த்திகேயன்!

சென்னை : நடிகர் ராம்சரண், ஜுனியர் என்டிஆர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து ஜனவரி 7ம் தேதி உலகளவில் ரிலீசாக உள்ள படம் ஆர்ஆர்ஆர்.

Recommended Video

Vijay, Dhanush &Sivakarthikeyan-னை Telugu industry-கு வரவேற்கிறோம் | RRR Jr.NTR Speech

ராஜமௌலி இயக்கத்தில் இந்தப் படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.

RRR படம்

RRR படம்

நடிகர் ராம்சரண், ஜூனியர் என்டிஆர் உள்ளிட்டவர்கள் லீட் கதாபாத்திரங்களில் நடித்து ஜனவரி 7ம் தேதி திரைக்கு வரவுள்ள படம் ஆர்ஆர்ஆர். இந்தப் படம் ராஜமௌலியின் இயக்கத்தில் உருவாகியுள்ளது. சுதந்திர போராட்ட காலக்கட்டத்தையொட்டி எடுக்கப்பட்டுள்ள இந்தப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரசிகர்கள் உற்சாகம்

ரசிகர்கள் உற்சாகம்

பாகுபலி படங்களின் பிரம்மாண்டமான வெற்றியையடுத்து ராஜமௌலி இந்தியாவின் சிறப்பான இயக்குநராக அறியப்படுகிறார். இந்நிலையில் இவரது இயக்கத்தில் தற்போது ஆர்ஆர்ஆர் படம் உருவாகியுள்ளது. இந்தப் படம் உலகளவில் இந்திய ரசிகர்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது.

வரவேற்பை பெற்ற RRR

வரவேற்பை பெற்ற RRR

படத்தின் டீசர், ட்ரெயிலர் உள்ளிட்டவை வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. இந்நிலையில் படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் படத்தின் விழா ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில் ஓமிக்ரான் பரவலையடுத்து அவை ரத்து செய்யப்பட்டுள்ளன.

சென்னையில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி

சென்னையில் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி

இந்நிலையில் சென்னையில் நேற்றைய தினம் பிரம்மாண்டமான பிரீ ரிலீஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், உதயநிதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன், 2022 பிரம்மாண்டமான படங்களின் ஆண்டாக இருக்கும் என்று தெரிவித்தார்.

ராஜமௌலியுடன் பேச்சு

ராஜமௌலியுடன் பேச்சு

இந்த இரண்டு படங்கள் அதிகமான ரசிகர்களை திரையரங்குகளுக்கு வரவைக்கும் என்றும் இதன்மூலம் ஒட்டுமொத்த சினிமா இன்டஸ்ட்ரி பயன் பெறும் என்றும் அவர் கூறியுள்ளார். தொடர்ந்து மேடையில் இயக்குநர் ராஜமௌலியுடன் மேடையில் சிவகார்த்திகேயன் பேசினார்.

ராம்சரண் உற்சாகம்

ராம்சரண் உற்சாகம்

தன்னுடைய மகன் பெயரும் கார்த்திகேயா தான் என்று ராஜமௌலி சிவகார்த்திகேயனிடம் தெரிவித்துள்ளார். மேலும் மற்றவர்கள் தன்னை எவ்வாறு அழைப்பதை சிவா விரும்புவார் என்றும் ராஜமௌலி கேட்டறிந்தார். இவர்களது இந்த விவாதத்தை ராம்சரண் உற்சாகத்துடன் அருகிலிருந்து பார்த்து மகிழ்ந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X