Actor Sivakarthikeyan: சம்பளமா.. படமா.. அயலான் படத்திற்காக சிவகார்த்திகேயன் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் அயலான். கடந்த 4 ஆண்டுகளை கடந்து இந்தப் படம் உருவாகி வந்தது. இன்று நேற்று நாளை படத்தை இயக்கி வெற்றிப்பட இயக்குநராக வலம்வரும் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள அயலான் படத்திலும் சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தைதான் கையிலெடுத்துள்ளார் இயக்குநர். இந்தப் படத்தில் ஏலியன் கேரக்டரை வைத்து கதைக்களம் உருவாகியுள்ளது. வேற்று கிரகத்திலிருந்து வரும் ஏலியன், சிவகார்த்திகேயன் மற்றும் அவரது கேங்குடன் செய்யும் அலப்பறைகளை இந்தப் படத்தில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார் ரவிக்குமார்.

இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுடன் ரகுல் பிரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளனர். படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சில பிரச்சினைகளால் படம் ரிலீஸ் தள்ளிப் போக வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகின. இருந்தபோதிலும் படத்தை குறிப்பிட்டபடி ரிலீஸ் செய்ய படக்குழுவினர் மும்முரமாக வேலை செய்து வருகின்றனர். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகி ரசிகர்களை குஷியாக்கிவரும் சூழலில் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி இன்றைய தினம் தாஜ் கோரமண்டலில் துவங்கி நடந்து வருகிறது.

Actor Sivakarthikeyan has done Ayalaan movie without getting Salary

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன் உள்ளிட்டவர்கள் இநத்ப் படத்தில் இணைந்துள்ளனர். முன்னதாக இன்று நேற்று நாளை என்ற சயின்ஸ் பிக்ஷன் படத்தை கொடுத்திருந்த இயக்குநர் ரவிக்குமார், இந்தப் படத்திலும் அந்த ஜானரிலேயே படத்தை இயக்கியுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக இந்தப் படம் தயாராகி வந்துள்ளது. படத்தின் சூட்டிங்கை 85 நாட்களில் ரவிக்குமார் முடித்த நிலையில் VFX வேலைகள் அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் பிரமோஷன்களையொட்டி நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

சின்னி ஜெயந்துடன் பேட்டி: இந்நிலையில் யூடியூப் சேனல் ஒன்றிற்காக நடிகர் சின்னி ஜெயந்துடன் சிவகார்த்திகேயன் பேட்டி கொடுத்துள்ளார். இந்தப் படத்திற்காக சிவகார்த்திகேய்ன சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் நடித்ததாக தகவல்கள் வெளியான நிலையில் அதுகுறித்து சின்னி ஜெயந்த் கேள்வி எழுப்பினார். தன்னுடைய லாங்குவேஜில் கில்ஃபோசியா வாங்கவில்லை என்று கூறப்படுவது குறித்து அவர் கேள்வி எழுப்பிய நிலையில், சம்பளம் வேண்டுமா, படம் வரவேண்டுமா என்பதுதான் கேள்வியாக இருந்ததாகவும் இதுபோன்ற ஒரு படத்தை நம் ஊரியில் குறிப்பிட்ட பட்ஜெட்டில் செய்ய வேண்டும் என்று யோசித்தே இந்த படத்தை ஒப்புக் கொண்டதாகவும் அவர் கூறினார்.

சம்பளம் வாங்காத சிவகார்த்திகேயன்: முன்னதாக இந்தப் படத்தை துவங்கியபோது பான் இந்தியா என்ற கான்செப்டே இல்லை என்றும் அப்போது பாகுபலி 1 மட்டுமே வெளியாகியிருந்ததாகவும் அதையடுத்தே பாகுபலி 2, கேஜிஎப் போன்ற படங்கள் பான் இந்தியா படமாக வெளியானதாகவும், இதனால் இந்தப் படத்தை சவாலாக எடுத்துக் கொண்டு தாங்கள் உருவாக்க நினைத்ததாகவும் சிவகார்த்திகேயன் கூறினார். இந்த சவாலை ஏற்று படத்தை வெளியில் கொண்டுவந்துவிட்டால், தமிழில் இதுபோன்ற முயற்சிகள் தொடர்ந்து வரும் என்றும் தாங்கள் கருதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

படத்தை ரிலீஸ் செய்தால் போதும்: இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும் நிதி நெருக்கடிகள் இருந்த நிலையில், இந்தப்படம் வெளியாக சில காம்பரமைஸ்களை செய்ய வேண்டிய கட்டாயத்தில் தான் இருந்ததாகவும் அதனால்தான் சம்பளம் வாங்கிக் கொள்ளாமல் தான் நடிக்க முன்வந்ததாகவும் சிவகார்த்திகேயன் மேலும் கூறியுள்ளார். படத்தை ரிலீஸ் செய்தால், இந்த விஷனை மக்களிடம் கொண்டு சேர்த்துவிட்டால் போதும் என்று தான் நினைத்ததாகவும் அவர் குறிப்பிட்டார். படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தப் படம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X