Actor Sivakarthikeyan: சிவகார்த்திகேயனை சுற்றி வளைத்த ரசிகர்கள்.. கைக்குலுக்கி உற்சாகம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் 10 ஆண்டுகளை கடந்து தன்னுடைய திரைப்பயணத்தை கோலிவுட்டில் தொடர்ந்து வருகிறார். மிக குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களின் விருப்பத்துக்குரிய நாயகனாகவும் தயாரிப்பாளராகவும் மட்டுமில்லாமல் பாடகராகவும் இவர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். கடந்த ஆண்டில் மாவீரன் என்ற வெற்றி படத்தை கொடுத்த சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஜனவரி மாதத்தில் பொங்கலையொட்டி அயலான் படம் வெளியானது. இந்த படம் ஏலியனை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டிருந்த நிலையில் படம் காமெடி, ஆக்சன் உள்ளிட்ட அனைத்து விஷயங்களையும் கொண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் இந்தப்படத்தை ரவிக்குமார் இயக்கியிருந்தார். படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து வெற்றி படமாக அமைந்துள்ளது. படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் ரிலீசாக நீண்ட ஆண்டுகளை எடுத்துக் கொண்டது. சிஜி வேலைகள் இதற்கான காரணங்களா கூறப்பட்ட நிலையில், இந்த வேலைகள் மிகச்சிறப்பாக அமைந்து படத்தின் வெற்றிக்கும் காரணங்களாக அமைந்தன. படத்தில் தன்னுடைய இயல்பான நடிப்பால் மெருகூட்டியிருந்தார் சிவகார்த்திகேயன்.

Actor Sivakarthikeyan meets his fans in his shooting spot

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் டாக்டர், டான் ஆகிய படங்களில் நடித்து தயாரிப்பாளராகவும் அவர் ஸ்கோர் செய்திருந்தார். இந்த படங்களைத் தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றியாக உருவாகும் என்று எதிர்பார்ப்பில் வெளியான சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படம் சொதப்பலாக அமைந்தது. இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிடைத்த நிலையில் வசூலும் சிறப்பாக அமையவில்லை. இதையடுத்து கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படம் ஃபேண்டஸி ஜானரில் சிறப்பாக அமைந்தது.

அயலான் படம்: இதையடுத்து கடந்த மாதம் பொங்கலையொட்டி வெளியான சிவகார்த்திகேயனின் அயலான் படமும் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. இந்த இரு படங்களும் 100 கோடி கிளப்பில் இணையவில்லை என்ற போதிலும் வசூலில் சாதனை படைத்தன. இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் சூட்டிங் இந்த மாத இறுதி அல்லது அடுத்த மாத துவக்கத்தில் நிறைவடையும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் படம் ஆகஸ்ட் வெளியீடாக ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரசிகர்களின் விருப்ப நாயகன்: அடுத்தடுத்து சிறப்பான வெற்றிகளை கொடுத்து வரும் சிவகார்த்திகேயன் பக்கத்து வீட்டு பையன் லுக்கில் ஏராளமான ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகனாக இருந்து வருகிறார். அவரை பார்க்கும் இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தற்போது சிவகார்த்திகேயன் பட சூட்டிங் சென்னையில் விஐடி கல்லூரியில் நடந்துள்ளது.அவர் ஷூட்டிங்கை முடித்துக்கொண்டு கிளம்பிய நிலையில் அவரை ஏராளமான ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு அவரிடம் கைகுலுக்கி ஆரவாரத்தை வெளிப்படுத்தினர். மேலும் அவருடன் இணைந்து செல்ஃபி எடுக்கவும் அவரை வீடியோவாக பதிவு செய்யவும் ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.


ரசிகர்களை சந்தித்த சிவகார்த்திகேயன்: ரசிகர்களிடம் அன்புடன் பேசிய சிவகார்த்திகேயன் தொடர்ந்து காரில் ஏறி புறப்பட்டு சென்றார். இந்த சம்பவம் வீடியோவாக எடுக்கப்பட்டு சமூக வலைதளங்களில் ஏராளமான ரசிகர்களால் பகிரப்பட்டு வருகின்றன. சமீபத்தில் சிவகார்த்திகேயன் பிறந்தநாளையொட்டி அமரன் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்ட,து. படத்தில் மூன்று விதமான கெட்டப்புகளில் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. ராணுவ வீரர் மற்றும் பொறுப்பான குடும்ப தலைவர் இது இல்லாமல் மற்றொரு கெட்டப்பிலும் அவர் படத்தில் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த படத்தை தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே23 படத்தில் சிவகார்த்திகேயன் விரைவில் இணைய உள்ளார். படத்தில் போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X