Sivakarthikeyan: மலையாள படத்தில் களமிறங்கும் சிவகார்த்திகேயன்.. அட ஜெயிலர் பட ஆக்டரோட நடிக்கிறாரா!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் படம் தீபாவளியையொட்டி வரும் 31ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தின் ரிலீசையொட்டி கடந்த சில வாரங்களாகவே படத்தின் பிரமோஷன்கள் சிறப்பாக களைகட்டி வருகிறது. சிவகார்த்திகேயன், இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, நடிகை சாய் பல்லவி, தயாரிப்பாளர் கமலஹாசன உள்ளிட்டவர்கள் இதில் ஈடுபட்டனர்.
டீமாகவும் தனித்தனியாகவும் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினர் பேட்டிகளை கொடுத்து வருகின்றனர். இவற்றில் அமரன் படம் குறித்து மட்டுமில்லாமல் தன்னுடைய அடுத்தடுத்த படங்கள் குறித்தும் சிவகார்த்திகேயன் பேசி வருகிறார். இந்நிலையில் விரைவில் மலையாள படத்தில் தான் நடிக்க உள்ளதாக சிவகார்த்திகேயன் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன். சாய் பல்லவி லீட் கேரக்டர்களில் நடித்துள்ள அமரன் படம் இன்னும் இரு தினங்களில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதற்கான அதிகப்பட்ச ப்ரமோஷன்களில் படக்குழுவினர் அடுத்தடுத்து ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவில் அடுத்தடுத்த மொழிகளில் ப்ரோமோஷன்களை மேற்கொண்ட படக்குழுவினர் வெளிநாடுகளிலும் சிறப்பான பிரமோஷன்களில் ஈடுபட்டனர். இந்த படத்தில் ராணுவ வீரர் மேஜர் முகுந்தனின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. முகுந்தன் மற்றும் அவரது மனைவி இந்து ரெபெக்கா வர்கிஸ் இருவரின் வாழ்க்கையையும் அவர்களின் காதலையும் திருமணத்தையும் மையமாக கொண்டு அடுத்தடுத்த காட்சிகள் இந்த படத்தில் சிறப்பாக சேர்க்கப்பட்டுள்ளன.
ராணுவ வீரராக சிவகார்த்திகேயன்: முதல் முறையாக இந்த படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன். இந்நிலையில் டெல்லியில் இந்த படத்தை ராணுவ வீரர்களுக்கு ஸ்பெஷல் ஸ்கீரினிங் செய்யப்பட்டதாகவும் அப்போது தனக்கு சிறிது டென்ஷனாக இருந்ததாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். ஆனால் படம் பார்த்துவிட்டு அவர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்து விட்டதாகவும் அதில் இரண்டு ஆபீசர்கள் தன்னிடம் வந்து தனக்கு ஒரு ஆஃபர் தருவதாக கூறியதாகவும் அவர்களுடன் சென்று ஜாயின் செய்யக் கூறியதாகவும் சிவகார்த்திகேயன் உற்சாகம் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் உற்சாகம்: தீபாவளி ரிலீசாக சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம்ரவியின் பிரதர் மற்றும் கவினின் பிளடி பெக்கர் என அடுத்தடுத்து மூன்று படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகவுள்ளன. துல்கர் சல்மானின் லக்கி பாஸ்கர் படம் தமிழில் ரிலீஸ் ஆகவுள்ளது. அடுத்தடுத்த இந்த படங்களை பார்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் சிவகார்த்திகேயனின் அமரன் படம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தின் அடுத்தடுத்த பிரமோஷன்களில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சிவகார்த்திகேயன் கொடுத்து வரும் பேட்டியில் தன்னுடைய அமரன் படம் குறித்தும் அடுத்தடுத்து தான் இணையுள்ள படங்கள் குறித்தும் பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
மலையாள படத்தில் சிவகார்த்திகேயன்: அந்த வகையில் அவர் விரைவில் மலையாள படம் ஒன்றில் நடிக்க உள்ளதாகவும் அதற்கான பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளார். அதன் இயக்குநர் உள்ளிட்ட எது குறித்தும் தற்போது கூற முடியாது என்று தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், படத்தில் மோகன்லால் உடன் இணைந்து நடிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளார். விஜேவாக விஜய் டிவியில் பல நிகழ்ச்சிகளை கொடுத்து வந்த சிவகார்த்திகேயன், சினிமாவில் இணைந்து தற்போது ஆக்ஷன் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டுள்ளார். இந்நிலையில் தமிழில் மட்டும் நடித்து வந்த அவர் அடுத்தடுத்த மொழி படங்களிலும் இணையவுள்ளது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அவருக்கு தமிழில் மட்டும் இல்லாமல் மற்ற மொழிகளிலும் அதிகமான ரசிகர்கள் காணப்படுவதன் எதிரொலியாகவே இந்த விஷயம் பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











