Actor Sivakarthikeyan: விரைவில் SK25 பட அறிவிப்பு.. சிவகார்த்திகேயன் கூல் டாக்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த படங்களில் சரியான இடைவெளிகளில் நடித்து வருகிறார். கடந்த ஆண்டில் அவரது மாவீரன் படம் வெளியாகி சிறப்பான வரவேற்பையும் வசூலையும் குவித்த நிலையில் அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவரது அயலான் படம் பொங்கலையொட்டி வரும் 12ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு, ட்ரெயிலர் வெளியீடு என அடுத்தடுத்து படக்குழுவினர் மாஸ் காட்டி வருகின்றனர். இந்தப் படம் இன்னும் சில தினங்களில் ரிலீசாகவுள்ள நிலையில் படம் குறித்த அதிகமான எதிர்பார்ப்பில் ரசிகர்கள் உள்ளனர்.

அயலான் படத்தை தொடர்ந்து எஸ்கே21 படத்தின் டைட்டில் உள்ளிட்ட அப்டேட்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. படத்தில் ராணுவ வீரராக நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். படத்தில் சாய் பல்லவி அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்த ஆண்டிலேயே சிவகார்த்திகேயனின் இந்தப் படமும் ரிலீசாகவுள்ளது. இந்நிலையில் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே24 படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் ஏப்ரல் மாதத்தில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Actor Sivakarthikeyan opens up about his SK25 movie

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான இயக்குநர்களுடன் தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் வெளியாகி மாஸ் காட்டியது. இந்தப் படத்தில் அதீதி ஷங்கர், யோகிபாபு, சரிதா, மிஷ்கின் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்திருந்தனர். படம் மிகப்பெரிய ஹிட்டடித்த நிலையில், அடுத்தடுத்த படங்களில் சிவகார்த்திகேயன் கமிட்டாகி நடித்து வருகிறார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல் தயாரிப்பில் நடித்து வருகிறார். அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

அயலான் பட ரிலீஸ்: இதனிடையே கடந்த 4 ஆண்டுகளாக உருவாகிவந்த அயலான் படம் வரும் 12ம் தேதி பொங்கலையொட்டி திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இந்தப் படத்தின் இசை வெளியீடு கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்த நிலையில் நேற்றைய தினம் படத்தின் டிரெயிலர் வெளியானது. இந்த டிரெயிலரை தமிழ் மற்றும் தெலுங்கில் நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். சயின்ஸ் பிக்ஷனை மையமாக கொண்டு அயலான் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தினை இன்று நேற்று நாளை படத்தை கொடுத்த ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

பிரமோஷனில் சிவகார்த்திகேயன்: தற்போது அயலான் படத்தின் பிரமோஷனையொட்டி அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்துவருகிறார் சிவகார்த்திகேயன். அதில் அவருடைய SK25 படம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. ஒவ்வொரு நடிகரின் வாழ்க்கையிலும் 25வது படம் என்பது மிகவும் முக்கியமானதாக அமையும் என்பதை சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த சிவகார்த்திகேயன், தற்போது ராஜ்குமார் படத்தில்தான் தான் அதிகமாக கவனம் செலுத்தி வருவதாகவும் அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் படத்தில் நடிப்பதில் மிகவும் ஆவலுடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

விரைவில் எஸ்கே25 பட அறிவிப்பு: தன்னுடைய எஸ்கே25 படம் தற்போது பேச்சுவார்த்தையில் உள்ளதாகவும் கூடிய விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்ததாக ரஜினியின் 171 படத்தில் சிவகார்த்திகேயன் லீட் கேரக்டரில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படம் உறுதிப்படுத்தப்படும் சூழலில் அது சிவகார்த்திகேயனின் 25வது படமாக அமையும். ரஜினியின் தீவிர ரசிகரான சிவகார்த்திகேயனின் 25வது படம், அவருடன் இணைந்து நடிப்பது அவருக்கு மிகச்சிறப்பாக அமையும். அவருடைய ரசிகர்களுக்கும் அதிகமான உற்சாகத்தை கொடுக்கும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X