Actor Sivakarthikeyan: சின்ன வேஷம்னாலும் சூப்பர்ஸ்டாரோடு நடிக்கத் தயார்.. சிவகார்த்திகேயன் ஓபன்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தின் வெற்றி அவரை உற்சாக நடைபோட வைத்துள்ளது. இடையில் சர்ச்சைகளை சந்தித்தாலும் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அவரது அயலான் படம் பொங்கலையொட்டி ரிலீசாகவுள்ளது. தற்போது நடித்துவரும் எஸ்கே21 படத்தின் சூட்டிங்கும் நிறைவடையும் கட்டத்தில் உள்ளது. படத்தின் 80 சதவிகித சூட்டிங் நிறைவடைந்துள்ளதாக அவர் தனது சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். படத்தின் இன்னும் சில காட்சிகள் மற்றும் க்ளைமாக்ஸ் மட்டுமே எடுக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

பரிசோதனை முயற்சியாக எஸ்கே 21 படம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் இந்தப் படத்தில் நடித்ததற்காக தான் அதிகளவில் பெருமைப்படுவதாகவும் சிவகார்த்திகேயன் மேலும் கூறியுள்ளார். இந்தப்படத்தின் கதை கமலையும் அதிகமாக கவர்ந்துள்ள நிலையில், படத்தின் கதையில் நம்பிக்கை வைக்க அவர் கேட்டுக் கொண்டுள்ளதாகவும் அப்பொழுதுதான் படம் அனைவரையும் கவரும்வகையில் அமையும் என்றும் அவர் தெரிவித்ததாகவும் சிவகார்த்திகேயன் மேலும் கூறியுள்ளார். இதனிடையே இன்றைய தினம் அயலான் படத்தின் பிரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றுள்ளார்.

Actor Sivakarthikeyan opens up about Rajinikanths Thalaivar 171 movie

நடிகர் சிவகார்த்திகேயன்: அயலான் படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் தாடி, மீசை இல்லாமல் கிளீன் ஷேவ் லுக்கில் நடிகர் சிவகார்த்திகேயன் காணப்பட்டார். நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த அவர், முதலில் அங்கு வைக்கப்பட்டுள்ள ஏலியன் உருவ பொம்மையுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டார். தொடாந்து நிகழ்ச்சியில் பங்கேற்று பல சுவாரஸ்யங்களை பகிர்ந்துக் கொண்டார். நிகழ்ச்சியில் மாரி செல்வராஜ் உள்ளிட்ட இயக்குநர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய படத்தின் இயக்குநர் ரவிக்குமார், சிவகார்த்திகேயன் குறித்து தன்னுடைய நெகிழ்ச்சியை பகிர்ந்துக் கொண்டார்.

ரவிக்குமார் பாராட்டு: தன்மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து சிவகார்த்திகேயன் தன்னை உற்சாகப்படுத்தியதாக அவர் கூறினார். நிகழ்ச்சியில் ஏஆர் ரஹ்மான் உள்ளிட்டவர்களும் பேசி ரசிகர்களை உற்சாகப்படுத்தினர். இந்தப் படத்திற்காக 5 மடங்கு அதிகமாக உழைக்க வேண்டியிருந்ததாக ஏஆர் ரஹ்மான் குறிப்பிட்டார். இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி சென்னை தாஜ் கோரமண்டலில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. இதனிடையே படத்தை அதிகமாக பிரமோட் செய்யும் வகையில் பல யூடியூப் சேனல்களுக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பேட்டிகளை கொடுத்து வருகிறார்.

பிரமோஷனில் சிவகார்த்திகேயன்: அந்த வகையில் பேசிய சிவகார்த்திகேயன் அயலான் படம் குறித்து மட்டுமில்லாமல் தான் தற்போது நடித்துவரும் எஸ்கே 21 படம், அடுத்ததாக ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ள படம் குறித்தெல்லாம் பகிர்ந்துக் கொண்டார். தொடர்ந்து ரஜினிகாந்துடன் தலைவர் 171 படத்தில் தான் இணையவுள்ளதாக வெளியான செய்திகளை தானும் பார்த்ததாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டார். இந்தப் படத்தில் தான் இணைவது குறித்து தனக்கு இதுவரை யாரும் தன்னிடம் பேசவில்லை என்றும் சமூக வலைதளங்கள் மூலமாகவே இதை தான் அறிந்ததாகவும் அவர் மேலும் கூறினார்.

ரஜினியுடன் ஒரு சீன்லயும் நடிக்க தயார்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகன் தான் என்றும் அவரின் படத்தில் சிங்கிள் ஷாட்டாக இருந்தாலும் நடிக்க தான் எப்போதும் தயாராக உள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். ரஜினியை பார்த்தே சினிமாவில் அதிகமான விஷயங்களை தான் கற்றதாகவும் ஒரு ரசிகனாக ரஜினியுடன் நடிக்க தான் எப்போதும் தயாராக உள்ளதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகவுள்ள தலைவர் 171 படத்தின் சூட்டிங் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் துவங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X