Actor Sivakarthikeyan: 2023ம் ஆண்டில் சிவகார்த்திகேயனுக்கு பிடித்த படங்கள்.. அவரே சொன்ன விஷயம்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் பொங்கலையொட்டி வெளியாகவுள்ள படம் அயலான். இந்தப் படத்தின் பிரமோஷன்களுக்காக அடுத்தடுத்த பேட்டிகளை கொடுத்து வருகிறார் சிவகார்த்திகேயன். ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக உருவாகியுள்ளது அயலான். படத்தில் ரகுல் பிரீத் சிங், யோகிபாபு, கருணாகரன் போன்றவர்களும் இணைந்துள்ளனர். படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். அவரது இசையில் படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. சமீபத்தில் படத்தின் இசை வெளியீடும் நடைபெற்றது.
வரும் ஜனவரி 5ம் தேதி படத்தின் டிரெயிலர் வெளியிடப்பட உள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் அவரது மாவீரன் படம் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுத் தந்தது. இந்தப் படம் டாக்டர், டான் படங்களை காட்டிலும் கமர்ஷியலாக வெற்றியை கொடுத்ததாக சிவகார்த்திகேயன் தன்னுடைய பேட்டியொன்றில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல அயலான் படமும் குழந்தைகள் முதல் பெரியர்கள் வரை அனைத்து தரப்பினரையும் வெகுவாக கவரும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். முன்னதாக படத்தின் டீசர் உள்ளிட்டவை வெளியாகியுள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் நாயகனாகவே வலம்வந்துக் கொண்டிருக்கிறார். சின்னத்திரையில் ஏராளமான ரசிகர்களை கவர்ந்த இவர் காமெடியனாகவே தன்னுடைய பயணத்தை சினிமாவில் துவங்கினாலும் அடுத்தடுத்த படங்கள் இவருக்கு நாயகனாக சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது ஆக்ஷன் ஹீரோவாக தன்னை உயர்த்திக் கொண்டுள்ளார். அடுத்ததாக எஸ்கே 21 படத்தில் ராணுவ அதிகாரியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தினை ராஜ்குமார் பெரியசாமி இயக்கிவரும் நிலையில் கமல்ஹாசன் தயாரித்து வருகிறார்.
அயலான் படம்: அயலான் படம் வரும் பொங்கலையொட்டி ஜனவரி 12ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. இதையொட்டி கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் இசை வெளியீடு நடைபெற்றது. இதில் சிவகார்த்திகேயன், ரவிக்குமார் உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டு ரசிகர்களிடையே படம் குறித்த அனுபவங்களை பகிர்ந்துக் கொண்டனர். படத்தின் அடுத்த பாகம் குறித்து இயக்குநர் ரவிக்குமார் பேசியது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த நிகழ்ச்சியில் பேசிய சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து படத்தின் பிரமோஷனுக்கான பேட்டிகளையும் கொடுத்து வருகிறார்.
2023ம் ஆண்டின் ஃபேவரைட் படங்கள்: அந்த வகையில் இந்த 2023ம் ஆண்டில் தன்னுடைய விருப்பத்திற்குரிய படங்களை அவர் பட்டியலிட்டுள்ளார். யாத்திசை, குட்நைட், போர் தொழில், பார்க்கிங், டாடா, ஜோ போன்ற படங்கள் இந்த ஆண்டில் தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இவர்களில் சிலரின் இயக்கத்தில் இணைவதற்கான பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார். சமீப காலங்களில் முதல்பட வெற்றி இயக்குநர்களின் இரண்டாவது படங்களில் சிவகார்த்திகேயன் இணைந்து சக்சஸ் கொடுத்துவரும் நிலையில், அவர் இவ்வாறு பேசியுள்ளார்.
மாவீரன் குறித்து சிவகார்த்திகேயன்: மாவீரன் படமும் மடோன் அஸ்வினின் இரண்டாவது படமாகவே வெளியானது. அவரது முதல் படம் மண்டேலா ஓடிடியில் வெளியான நிலையில், அவரது இயக்கத்தில் திரையரங்குகளில் வெளியான முதல் படமாக மாவீரன் அமைந்தது. இந்தப் படம் கமர்ஷியலாக தனக்கு வெற்றிப்படமாக அமைந்ததாக சமீபத்திய பேட்டியில் சிவகார்த்திகேயன் கூறியுள்ளார். இந்தப் படம் சோதனை முயற்சியாக எடுக்கப்பட்ட நிலையில், புதிய இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என இந்தப் படம் மிகச்சிறப்பாக அமைந்தது. மேலும் படம் பண்டிகைக்கால ரிலீசாக இல்லாமல் சாதாரண நாளில் வெளியான நிலையிலும் மாஸ் காட்டியதாகவும் சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications











