Sivakarthikeyan: விஜய்க்கு சொன்ன கதையில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. ஏஆர் முருகதாஸ் பிளான் இதுதான்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய அடுத்தடுத்த படங்களால் ஏராளமான ரசிகர்களை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டு இவருக்கு சிறப்பாக அமைந்தது. மாவீரன் என்ற படத்தை கொடுத்திருந்தார். இந்த படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி சாதனை புரிந்தது. இந்த படத்தை அடுத்து இந்த ஆண்டில் ஜனவரி மாதத்திலேயே சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் படம் வெளியானது. நீண்ட காலங்களாக சிஜி வேலைகள் உள்ளிட்டவற்றால் இந்த படத்தில் ரிலீஸ் தாமதமான நிலையில் இந்த படம் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்துள்ளது.. அடுத்தடுத்து இரு படங்களின் வெற்றிகளால் தற்போது அவர் உற்சாகமாகியுள்ளார்.

தற்போது கமல்ஹாசனின் தயாரிப்பில் உருவாகி வரும் எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங்கையும் நிறைவு செய்ய உள்ளார் சிவகார்த்திகேயன். இன்றைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்த தினத்தையொட்டி நேற்று மாலை இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படத்திற்கு அமரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் வெளியான டீசரும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அவருக்கு சாய் பல்லவி ஜோடியாகியுள்ளார்.

Actor Sivakarthikeyan replaced Vijay -AR Murugadoss story it seems

நடிகர் சிவகார்த்திகேயன்: சின்னத்திரையில் இருந்து சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்து சக்ஸஸ் கொடுத்தவர்களில் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்மையானவராக காணப்படுகிறார். காமெடியனாக 3 படத்தின் மூலம் தன்னுடைய பயணத்தை துவங்கிய இவர், முன்னதாகவே மெரினா உள்ளிட்ட படங்களில் ஹீரோவாக நடித்திருந்தார். தொடர்ந்து காமெடியை விடாமல் பிடித்துக் கொண்டு காமெடி ஜானரிலேயே அடுத்தடுத்து வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்களை கொடுத்து வெற்றி நாயகனாக கோலிவுட்டில் வலம் வந்தார். ஒரு கட்டத்தில் ஆக்ஷன் ஹீரோவாகவும் தன்னுடைய பாதையை மாற்றிக் கொண்டுள்ளார்.

அடுத்தடுத்த வெற்றிகள்: கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படம் அவருக்கு சிறப்பாக கை கொடுத்தது. அதையடுத்து கடந்த மாதத்தில் பொங்கல் ரிலீசாக வெளியான அயலான் படமும் சிறப்பாக அமைந்தது. இரு படங்களின் அடுத்தடுத்த வெற்றிகளை தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே 21 படத்தை விரைவில் நிறைவு செய்ய உள்ளார் சிவகார்த்திகேயன். இன்றைய தினம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு நேற்று மாலை இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியிடப்பட்டது. படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

அமரன் டைட்டில் & டீசர்: படத்தின் டீசரும் ரசிகர்களை கவரும் வகையில் மிரட்டலாக அமைந்திருந்தது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தையடுத்து அடுத்ததாக ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் எஸ்கே 23 படத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் பூஜை கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் எளிமையான வகையில் போடப்பட்டு படத்தின் ஷூட்டிங் துவங்கப்பட்டுள்ளது. முன்னதாக விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகவிருந்த படத்தில்தான் தற்போது சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

விஜய் கதையில் சிவகார்த்திகேயன்: இந்த கதைக்களத்தை சிவகார்த்திகேயனுக்காக மாற்றம் செய்து ஏஆர் முருகதாஸ் எஸ்கே 23 படமாக உருவாக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. விஜய்க்காக உருவாக்கப்பட்ட இந்த கதைக்களத்தில் இரண்டாம் பகுதியில் சில பல மாற்றங்களை செய்து அவர் எஸ்கே 23 படமாக உருவாக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக விஜய்யின் மாஸ்டர் படத்தின் போது ஏஆர் முருகதாஸ் விஜய்க்கு கதை சொன்னதாகவும் அது துப்பாக்கி 2வாக உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது. ஆனால் ஏஆர் முருகதாஸின் கதை விஜய்க்கு பிடிக்காத நிலையில் அதில் இரண்டு மூன்று முறை மாற்றங்கள் செய்யப்பட்டதாகவும் இறுதியில் அந்த படம் கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது. இதே கதையை தற்போது சிவகார்த்திகேயனுக்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளார் ஏஆர் முருகதாஸ்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X