சிவகார்த்திகேயனின் அடுத்த படம் டான்... நாளை சூட்டிங் நிறைவு!

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பாக்ஸ் ஆபிசில் முதல் இடத்தில் உள்ளது.

அடுத்ததாக சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.

இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் நாளையுடன் நிறைவு பெற உள்ளதாக படக்குழு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கியுள்ள டாக்டர் படம் தொடர்ந்து இரண்டாவது வாரமாக வெற்றி நடைபோட்டு வருகிறது. நெல்சன் இயக்கத்தில் காமெடிக்கு முக்கியத்துவம் தரப்பட்டு வெளிவந்துள்ள இந்தப் படம் ரிபீட்டட் ஆடியன்சை தியேட்டர்களுக்கு வரவழைத்துள்ளது.

டான் படம்

டான் படம்

இதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் மீண்டும் இணைந்து படம் செய்ய உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவராகவும், பள்ளி மாணவராகவும் அவர் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனிருத் இசை

அனிருத் இசை

இந்தப் படத்தில் டாக்டர் படத்தின் நாயகி பிரியங்கா அருள் மோகனே நாயகியாக நடித்துள்ளார். அனிருத் படத்திற்கு இசையமைக்க, லைக்கா புரொடக்ஷன்ஸ் மற்றும் எஸ்கே புரொடக்ஷன்ஸ் இணைந்து இந்தப் படத்தை தயாரித்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நாளையுடன் நிறைவடையவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது.

Recommended Video

Doctor Movie Review | Sivakarthikeyan | Nelson | Poster Pakiri review | Filmibeat Tamil
இயக்குநர் அப்டேட்

இயக்குநர் அப்டேட்

படத்தில் எஸ்ஜே சூர்யா, சமுத்திரகனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். எஸ்ஜே சூர்யா சம்பந்தப்பட்ட காட்சிகள் ஏற்கனவே எடுத்து முடிக்கப்பட்டு விட்டதாக டைரக்டர் சில தினங்களுக்கு முன்பு தனது ட்விட்டர் பக்கத்தில் அப்டேட் தெரிவித்திருந்தார்.

எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

எஸ்ஜே சூர்யா மகிழ்ச்சி

இதற்கு பதிலளித்த எஸ்ஜே சூர்யா, இந்தப் படத்தின் சூட்டிங் மிகவும் அழகாக இருந்ததாகவும் அதற்கு சிபி சக்ரவர்த்தி மற்றும் சிவகபர்த்திகேயனுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார். மேலும் டான் படம் மிகப்பெரிய வெற்றி பெறும் என்றும் தெரிவித்திருந்தார். இதையடுத்து சிவகார்த்திகேயனின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்தனர்.

சூட்டிங் நாளை நிறைவு

சூட்டிங் நாளை நிறைவு

இந்நிலையில் படத்தின் சூட்டிங் நாளையுடன் நிறைவடையவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இதையடுத்து படத்தை விரைவில் ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு வருகிறது. தொடர்ந்து படத்தின் டீசர், பர்ஸ்ட் லுக், ட்ரெயிலர் உள்ளிட்டவற்றை அடுத்தடுத்து ரசிகர்கள் எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X