Sivakarthikeyan: ஸ்டைல் லுக்கில் மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.. தலையில் க்யூட் மாஸ்க்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். கடந்த 14ம் தேதி அவரது மாவீரன் படம் சர்வதேச அளவில் ரிலீசானது.

சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகிபாபு உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படம் ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகியுள்ளது.

கடந்த 11 நாட்களில் படம் சர்வதேச அளவில் 75 கோடி ரூபாய்களை வசூலித்துள்ளதாக படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Actor Sivakarthikeyan shared new photoshoot photos in his instagram that attracts fans very much

சிவகார்த்திகேயனின் மாஸ் போட்டோஷுட்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த தேர்ந்தெடுத்தக் கதைகளில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அவரது டாக்டர் மற்றும் டான் படங்கள் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிறப்பாக கைக்கொடுத்தன. 100 கோடி ரூபாய் கிளப்பிலும் இணைந்தன. இரண்டு படங்களும் முற்றிலும் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களுக்கு விருந்தளித்தன. இந்தப் படங்களை தொடர்ந்து வெளியான அவரது பிரின்ஸ் படமும் வெற்றிப்படமாக அவருக்கு ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சிவகார்த்திகேயனுக்கு பிரின்ஸ் படம் சொதப்பலாக அமைந்தது. படம் கடந்த தீபாவளியில் மாஸ் ரிலீசாக வெளியான நிலையில், நினைத்த அளவில் வெற்றியை கொடுக்கவில்லை. இந்நிலையில், தற்போது சிவகார்த்திகேயனின் மாவீரன் படம் கடந்த 14ம் தேதி ரிலீசாகி மிகுந்த வரவேற்பையும் வசூலையும் பெற்றுள்ளது. கடந்த 11 நாட்களில் இந்தப் படத்தின் வசூல் 75 கோடிகளை தாண்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.

Actor Sivakarthikeyan shared new photoshoot photos in his instagram that attracts fans very much

சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகிபாபு, சரிதா உள்ளிட்டவர்கள் நடித்திருந்த இந்தப் படத்தில் ஒரு விபத்தில் வித்தியாசமான சக்தி கிடைக்கப்பெறும் சிவகார்த்திகேயன், அதை வைத்து எப்படி தன்னை சார்ந்தவர்களுக்கு உதவி செய்கிறார் என்பதாக கதைக்களம் அமைந்திருந்தது. எப்போதுமே பக்கத்து வீட்டு பையன் லுக்கில் காணப்படும் சிவகார்த்திகேயனுக்கு அந்த லுக் இந்தப் படத்திலும் சிறப்பாக அமைந்திருந்தது.

நீண்ட காலங்களுக்கு பிறகு இந்தப் படத்தில் சரிதாவும் இணைந்திருந்தது படத்திற்கு கூடுதல் அட்ராக்ஷனை கொடுத்தது. மிஷ்கின் இந்தப் படத்தில் வேட்டி கட்டிய வில்லனாக அனைவரையும் கவர்ந்திருந்தார். மண்டேலா அளவிற்கு யோகிபாபுவை இந்தப் படத்தில் மடோன் அஷ்வின் பயன்படுத்தவில்லை என்றபோதிலும் அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை அவர் சிறப்பாகவே செய்திருந்தார். தற்போது எஸ்கே21 படத்தின் சூட்டிங்கிற்காக காஷ்மீரில் உள்ள சிவகார்த்திகேயன், இடையிடையே சூட்டிங்கிலிருந்து கேப் எடுத்துக் கொண்டு இந்தப் படத்தின் பிரமோஷனில் பங்கேற்றார்.

Actor Sivakarthikeyan shared new photoshoot photos in his instagram that attracts fans very much

இதனிடையே படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அவர் சிறப்பான காஸ்ட்யூமில் அனைவரையும் கவர்ந்தார். படக்குழுவினர் அனைவரையும் மட்டுமில்லாமல் ரசிகர்களையும் இவரது காஸ்ட்யூம் வெகுவாக ஈர்த்தது. இந்நிலையில், இந்த காஸ்ட்யூமில் எடுக்கப்பட்ட போட்டோஷுட் புகைப்படங்களை அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு ரசிகர்களுக்கு உற்சாகமளித்துள்ளார். வெள்ளை நிற உடையில் தலையில் போடப்பட்ட மாஸ்க், கையில் கடிகாரம், கழுத்தில் மாலை என அவரது லுக் மிகவும் ஸ்டைலாக அமைந்திருந்தது. போட்டோஸ் வெளியான ஒரு மணிநேரத்திலேயே ஏறக்குறைய 4 லட்சம் லைக்ஸ்களை பெற்றிருந்தது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X