கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துகள்.. குடும்பத்துடன் சிவகார்த்திகேயன் செம ஹேப்பி!
சென்னை: அமரன் படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பிக் லீகில் வந்துவிட்டார் என அஜித் குமாரே பாராட்டிய நிலையில், தமிழ் சினிமாவும் சிவகார்த்திகேயனை கொண்டாடி வருகிறது. நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த ஆண்டு 3வதாக ஒரு குழந்தை பிறந்தநாளில், அந்த ஆண் குழந்தை பவனுக்கு இன்று முதல் பிறந்தநாள். அதனை முன்னிட்டு சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ள வாழ்த்து போஸ்ட்டுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப் போவது யாரு நிகழ்ச்சியில் ஸ்டாண்ட் அப் காமெடியனாக சிவகார்த்திகேயன் மிமிக்ரி எல்லாம் செய்து சிரிக்க வைக்கும் போது, தமிழ் சினிமாவையே ஒரு கலக்கு கலக்கப் போகிறார் இவர் என்பது பலருக்கும் தெரியாது.

அஜித் குமாரின் ஏகன் படத்தில் புத்தகங்களை தூக்கிக் கொண்டு அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த சிவகார்த்திகேயன், அஜித் குமாரையே பாக்ஸ் ஆபீஸில் பின்னுக்குத் தள்ளுவார் என்பதையும் ரசிகர்கள் கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார்கள். ஏன் அவரே கூட அமரன் படத்தின் வெற்றியை எல்லாம் முன்னதாக கணித்திருக்க மாட்டார்.
4வது இடத்தில் சிவகார்த்திகேயன்: தமிழ் சினிமாவில் வசூல் ரீதியாக பார்த்தால் ரஜினிகாந்த், விஜய், கமல்ஹாசனை தொடர்ந்து 4வது இடத்தில் பாக்ஸ் ஆபீஸ் கிங்காக மாறியுள்ளார் சிவகார்த்திகேயன். அஜித் குமாரின் கடைசி படமான குட் பேட் அக்லி படம் கூட, சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூலை முறியடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக விஜய்யுடனே பராசக்தி படத்தின் மூலம் கடும் போட்டி கொடுக்கப் போகிறார் என எதிர்பார்க்கப்படுகிறது. இடையே நடந்த அமலாக்கத்துறை சோதனை காரணமாக ஜன நாயகன் படத்துடன் பராசக்தி மோதுமா? என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
3 குழந்தைகள்: மாமன் மகள் ஆர்த்தியை 2010ம் ஆண்டு திருமணம் செய்துக் கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஆராதனா என்கிற மகளும், குகன் என்கிற மகனும் பிறந்தனர். அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு 3வது குழந்தையாக பிறந்த ஆண் குழந்தைக்கு பவன் என பெயரிட்டு இருந்தார். இந்நிலையில், அதற்குள் சிவகார்த்திகேயனுக்கு 3வது குழந்தை பிறந்து ஒரு வருடமாகி விட்டது.
3வது குழந்தையின் பிறந்தநாள்: தனது 3வது குழந்தையான பவனின் பிறந்தநாளை தனது குடும்பத்துடன் கொண்டாடி வரும் சிவகார்த்திகேயன், அதுதொடர்பாக சோஷியல் மீடியாவில் வெளியிட்ட போஸ்ட் ஒன்று தீயாக பரவி வருகிறது. அதில், "எங்கள் மகிழ்ச்சியை மும்மடங்காக்கிய கடைக்குட்டி பவனுக்கு முதல் பிறந்தநாள் வாழ்த்துகள்.. Happy first birthday dear Pavan kutty" என பதிவிட்டு தனது பாசத்தை கொட்டித் தீர்த்துள்ளார் சிவகார்த்திகேயன்.
அடுத்தடுத்து 2 பெரிய படங்கள்: ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ஏஸ் பட நடிகை ருக்மினி வசந்த் நடிப்பில் உருவாகி வரும் மதராஸி திரைப்படம் வரும் செப்டம்பர் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த படத்தைத் தொடர்ந்து, டான் பிக்சர்ஸ் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி மற்றும் ஸ்ரீலீலா நடிப்பில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது.


Click it and Unblock the Notifications











