இந்த நாளை மறக்கவே முடியாது... உருகிய டாக்டர் நாயகன்... எதுக்கு?

சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நேற்று முன்தினம் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்தார்.

இதையொட்டி அவருக்கு ஏராளமான வாழ்த்துக்கள் குவிந்தன.

இந்நிலையில் பிறந்தநாளை இனிமையாக்கிய அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன்

நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து வெற்றிப் படங்களை குவித்து வருகிறார். நகைச்சுவையில் துவங்கிய அவரது பயணம் தற்போது சிறப்பான நடிகர், தயாரிப்பாளர், பாடலாசிரியர், பாடகர் என நீண்டுள்ளது. மிமிக்ரி ஆர்ட்டிஸ்டாகவே விஜய் டிவியில் அவரது கேரியர் துவங்கியது. தற்போது ஏராளமான ரசிகர்களை ஈர்க்கும் கலை அவருக்கு கைவந்துள்ளது.

டாக்டர் படம் வெற்றி

டாக்டர் படம் வெற்றி

சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான டாக்டர் படம் தயாரிப்பாளராகவும் நடிகராகவும் அவருக்கு சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் அவரது அடுத்த படமான டான் வரும் மார்ச் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவராக நடித்துள்ளார். இதனிடையே அவரது அயலான் படமும் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

பிறந்தநாள் கொண்டாட்டம்

பிறந்தநாள் கொண்டாட்டம்

இந்நிலையில் கடந்த 17ம் தேதி அவர் தனது பிறந்தநாளை கொண்டாடி மகிழ்ந்துள்ளார். இதையொட்டி அவரை சக நடிகர்கள், பிரபலங்கள், ரசிகர்கள் என வாழ்த்து மழையில் நனைய விட்டனர். அவரது ரசிகர்களும் பல அன்னதானங்கள் உள்ளிட்டவற்றை செய்து அவரது பிறந்தநாளை சிறப்பாக்கினர்.

சிவகார்த்திகேயன் நன்றி

சிவகார்த்திகேயன் நன்றி

இந்நிலையில் ரசிகர்கள், நண்பர்கள், நலம்விரும்பிகள் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கை மூலம் சிவகார்த்திகேயன் தனது நன்றியை தெரிவித்துள்ளார். இந்த பிறந்தநாளை மிகவும் சிறப்பாக மறக்க முடியாததாக்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து அனைவருக்கும் பிடித்தமான படங்களை தருவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

அடுத்தடுத்த படங்கள்

அடுத்தடுத்த படங்கள்

சிவகார்த்திகேயன் பிரபல நடிகராக விளங்கி வருகிறார். அடுத்ததாக தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்திலும் நடிக்கவுள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பிலும் இவர் அடுத்தடுத்த படங்களில் நடிக்க கமிட்டாகி உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X