புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் அஞ்சலி.. குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல்!
பெங்களூரு: மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் நினைவிடத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
Recommended Video
கன்னட சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் புனித் ராஜ்குமார். மறைந்த கன்னட சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் ஐந்தாவது மற்றும் கடைக்குட்டி மகன் ஆவார்.
சிகர்களால் அப்பு, பவர் ஸ்டார், புனித் என பல பெயர்களால் அழைக்கப்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார் புனித் ராஜ்குமார்.
நீங்கள் செய்யும் சிறிய உதவி 6 மாத குழந்தை உயிர் பிழைக்க உதவும்

புனித் ராஜ்குமார் மரணம்
அப்போது திடீர் மாரடைப்பு ஏற்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் நடிகர் புனித் ராஜ்குமார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டுள்ளதாக கூறினர். இந்நிலையில் நடிகர் புனித் ராஜ்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

உடல் நல்லடக்கம்
அவரது உடல் கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. ஏராளமான ரசிகர்களும் அரசியல் பிரமுகர்களும் திரை நட்சத்திரங்களும் திரளாக வந்து அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். இதனை தொடர்ந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நினைவிடத்தில் நேரில் அஞ்சலி
நடிகர் புனித் ராஜ்குமார் உடல் கர்நாடகா அரசின் முழு மரியாதையுடன் 21 துப்பாக்கிக் குண்டுகள் முழங்க கன்டீரவா ஸ்டுடியோவில் தந்தை ராஜ்குமாரின் கல்லறை அருகே நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் சிவகார்த்திகேயன், நேற்று அவரது நினைவிடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

நேரில் சந்தித்து ஆறுதல்
புனித் ராஜ்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்ட கண்டீரவா ஸ்டுடியோவில் அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன், புனித் ராஜ்குமாரின் அண்ணனும் கன்னட சினிமாவின் பிரபல நடிகருமான சிவ ராஜ்குமாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

விரைவில் ரிலீஸ்
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் டாக்டர் படம் ரிலீஸ் ஆனது. இந்தப் படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது அயலான் மற்றும் டான் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படங்கள் விரைவில் திரைக்கு வரவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











