கோவில் கோவிலாக சுற்றும் சிவகார்த்திகேயன்.. பழனி முருகன் கோவிலில் மகன் பெயரில் அர்ச்சனை.. வழிபாடு!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்த போட்டோக்கள் வைரலாகி வருகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். அவரது நடிப்பில் உருவாகியுள்ள டாக்டர் மற்றும் அயலான் ஆகிய படங்களில் ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

இந்நிலையில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது டான் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார்.

ஆணைமலையில் டான் பட படப்பிடிப்பு

ஆணைமலையில் டான் பட படப்பிடிப்பு

மேலும் இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் ஆணைமலை பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

மாசாணி அம்மன் கோவிலில் வழிபாடு

மாசாணி அம்மன் கோவிலில் வழிபாடு

படப்பிடிப்பு இல்லாத நேரங்களில் நடிகர் சிவகார்த்திகேயன் அப்பகுதியில் உள்ள கோவில்களுக்கு சென்று வருகிறார். அந்த வகையில் நேற்று முன்தினம் ஆணைமலையில் உள்ள மாசாணி அம்மன் கோவிலுக்கு சென்றார் நடிகர் சிவகார்த்திகேயன். கோவிலில் அவர் சாமி தரிசனம் செய்த போட்டோக்களும் வீடியோக்களும் வைரலானது.

பழனி முருகன் கோவிலில் வழிபாடு

பழனி முருகன் கோவிலில் வழிபாடு

இந்நிலையில் பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் வழிபாடு செய்துள்ளார். அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம் செய்தார். பழனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவக நடிக்கும் டான் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.

மகன் குகன் தாஸ் பெயரில் அர்ச்சனை

மகன் குகன் தாஸ் பெயரில் அர்ச்சனை

இன்று அதிகாலை படப்பிடிப்பு முடித்த பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் பழனி முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்து தனது குடும்பத்தின் பெயரில் அர்ச்சனை செய்தார். மேலும் சிவகார்த்திகேயன் சமீபத்தில் பிறந்த தனது மகன் குகன் தாஸ் பெயரில் அர்ச்சனை செய்து வேண்டுதலை நிறைவேற்றினார்.

கோவில் சார்பில் வரவேற்பு

கோவில் சார்பில் வரவேற்பு

அதற்கு முன்னதாக மலை அடிவாரம் பகுதியில் இருந்து மின் இழுவை ரயில் மூலமாக மலைக்கோயில் சென்று அங்கு உள்ள முருகனை வழிபாடு செய்தார். அவருக்கு கோவில் நிர்வாகிகள் கோவில் சார்பில் வரவேற்பு கொடுத்து அபிஷேக பொருட்களை அவருக்கு வழங்கினர்.

18 வருடங்களுக்கு பிறகு அப்பா விரல் பிடித்துள்ளார்

18 வருடங்களுக்கு பிறகு அப்பா விரல் பிடித்துள்ளார்

கடந்த ஜூலை 12 ஆம் தேதி சிவகார்த்திகேயனின் மனைவி ஆர்த்தி ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். 18 வருடங்களுக்கு பிறகு தனது அப்பாவே தனக்கு மகனாக பிறந்திருப்பதாக உருக்கமாக பதிவிட்டிருந்தார். 18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார் என் மகனாக...என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.. அம்மாவும் குழந்தையும் நலம் என்று பதிவிட்டிருந்தார்.

மகனுக்கு அப்பா பெயர்

மகனுக்கு அப்பா பெயர்

இதையடுத்து ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிலையில் தனது மகனின் போட்டோவை முதல் முறையாக இணையத்தில் ஷேர் செய்தார் நடிகர் சிவகார்த்திகேயன்.அதில் தனது மகனை அள்ளி கொஞ்சி முத்தமிட்டுள்ளார் சிவகார்த்திகேயன். மேலும் எங்கள் அன்பு மகனை வாழ்த்திய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்..உங்கள் அன்போடும் ஆசியோடும் "குகன் தாஸ்" என பெயர் சூட்டியிருக்கிறோம் என பதிவிட்டிருந்தார்.

முதல் முறையாக தெலுங்கு படத்தில்

முதல் முறையாக தெலுங்கு படத்தில்

அதனை பார்த்த ரசிகர்கள் நடிகர் சிவகார்த்திகேயனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தனர். நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். அந்தப் படம் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X