Sivakarthikeyan: அமரன் படத்தில் 3 வித்தியாசமான லுக்குகளில் சிவகார்த்திகேயன்.. ரசிகர்கள் உற்சாகம்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தின் ஷூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் தயாரிப்பை நடிகர் கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மேற்கொண்டு வருகிறது. எஸ்கே21 படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சாய் பல்லவி ஜோடியாகியுள்ளார். கடந்த 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு அமரன் என்று பெயரிடப்பட்டுள்ளது.

முன்னதாக நடிகர் கார்த்திக் நடிப்பில் வெளியான அமரன் படத்தின் டைட்டில் தற்போது இந்த படத்திற்கு வைக்கப்பட்டுள்ளது. சிவகார்த்திகேயன் இந்தப் படத்தில் ராணுவ வீரராக நடித்துள்ளார். படததின் டீசர் அதையொட்டி காணப்பட்டது. படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடதுள்ளது. காஷ்மீரில் தொடர்ந்து மூன்று மாதங்கள் இந்தப் படத்தின் சூட்டிங் கடுமையான குளிர் உள்ளிட்ட சூழலில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, இந்த படத்தை தொடர்ந்து அடுத்ததாக எஸ்கே 23 படத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணைந்துள்ளார் சிவகார்த்திகேயன்,

Actor Sivakarthikeyans Amaran molvie he has 3 looks it seems

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்து சிறப்பான கூட்டணியில் இணைந்து வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். அந்த வகையில் கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் மற்றும் இந்த ஆண்டின் துவக்கத்தில் வெளியான அயலான் படங்கள் அவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளன. தொடர்ந்து தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வரும் தன்னுடைய 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்தின் சூட்டிங் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 17ம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி முந்தைய தினம் மாலை இந்த படத்தின் டைட்டில் மற்றும் டீசல் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கடந்துள்ளது.

அமரன் படம்: இந்த படத்திற்கு அமரன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும் வகையில் படத்தின் டீசர் அமைந்திருந்தது. படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்தப் படத்தில் மூன்று வித்தியாசமான லுக்குகளில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முதல் லுக்கில் ராணுவ வீரராகவும் இரண்டாவது லுக்கில் சாய் பல்லவியின் கணவராக குடும்பத் தலைவராகவும் நடித்துள்ளார். மூன்றாவது லுக் தற்போது சஸ்பென்ஸ் ஆக வைக்கப்பட்டுள்ளது. இது படத்தில் எந்தவிதமான லுக்காக இருக்கும் என்பதை அறிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

அதிரடி ஆக்ஷன் படம்: சிவகார்த்திகேயன் படங்களில் எப்போதுமே காமெடிக்கு முக்கிய பங்கு இருக்கும். ஆனால் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு காமெடி காட்சிகளை இல்லை என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. துப்பாக்கி உள்ளிட்ட படங்களைப் போல இந்த படத்தில் சிவகார்த்திகேயன் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் ஹீரோவாக மாசாக நடித்துள்ளதாகவும் காமெடி இல்லாமல் அவரது நடிப்பு இந்த படத்தில் காணப்படும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் இன்னும் 10 முதல் 15 நாட்களில் நிறைவடையவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சில தினங்களில் சூட்டிங் நிறைவு: இந்தப் படத்தை ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் சோனி பிக்சர்ஸ் பிலிம்ஸ் இந்தியா ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன. இந்தப் படத்திற்காக இரண்டு க்ளைமாக்ஸ் காட்சிகளை ராஜ்குமார் பெரியசாமி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. படத்தில் ராகுல் போஸ் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடித்துள்ளார். படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக இருக்கும்படியான போஸ்டரையும் லைகா வெளியிட்டிருந்தது. இந்தப் படம் மேஜா முகுந்த் வரதராஜனின் பயோபிக்காக உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ள நிலையில் படம் மிகப்பெரிய திட்டமிடலுடன் உருவாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X