Ayalan movie: துபாயில் திட்டமிடப்படும் அயலான் இசை & ட்ரெயிலர் வெளியீடு.. சீக்கிரமா நடத்தி முடிங்கப்பா!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் அடுத்தடுத்த சூப்பர்ஹிட் இயக்குநர்களுடன் கைகோர்த்து நடித்து வருகிறார். அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படம் அவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. முன்னதாக டாக்டர், டான் படங்களும் சிறப்பாக அமைந்த நிலையில், கடந்த தீபாவளிக்கு வெளியான பிரின்ஸ் படம் சொதப்பியது. இந்தப் படத்தை தொடர்ந்து உடனடியாக ஹிட் படத்தை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் இருந்த நிலையில், சமீபத்தில் வெளியான மாவீரன் படம் சிறப்பாக அமைந்தது. இந்நிலையில் தற்போது எஸ்கே21 படத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக ரிலீசுக்காக காத்திருக்கும் சிவகார்த்திகேயனின் அயலான் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளதாக ஒருபுறம் கூறப்படும் நிலையில் படம் மார்ச் மாதத்திற்கு ரிலீஸ் தள்ளிப் போவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் ட்ரெயிலர் ரிலீசுக்கும் படக்குழுவினர் தற்போது தயாராகி வருகின்றனர். சென்னையில் பிரம்மாண்டமான அளவில் படத்தின் ட்ரெயிலர் ரிலீஸ் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் தற்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன்: அடுத்தடுத்த சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். டாக்டர், டான் என அதிரடி 100 கோடி ரூபாய் ஹிட் படங்களை கொடுத்த அவருக்கு பிரின்ஸ் படம் சொதப்பலாக அமைந்தது. ஆனாலும் வீழ்வேன் என்று நினைத்தாயா என்று தோள்தட்டி களத்தில் இறங்கினார். அவரது நம்பிக்கையும் உழைப்பும் வீண் போகவில்லை. தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான மாவீரன் படம் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாஸ் ஹிட்டடித்தது. படத்தில் அவரது கேரக்டர் எந்தவித ஆர்ப்பாட்டமும் இல்லாமல் இயல்பாக அமைந்ததே சிறப்பாக பார்க்கப்பட்டது.
கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன்: இந்தப் படத்தின் வெற்றி தந்த உற்சாகத்துடன் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துவரும் எஸ்கே 21 படத்தின் சூட்டிங் நிறைவு கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தில் சாய் பல்லவி அவருக்கு ஜோடியாகியுள்ள நிலையில் ராணுவ வீரர் கேரக்டரில் நடித்து வருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து கடுமையான குளிரை பொருட்படுத்தாமல் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது. இதனிடையே சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த 4 ஆண்டுகளாக உருவாகிவரும் அயலான் படம் பொங்கலுக்கு ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
அயலான் இசை வெளியீடு: இந்த ரிலீசில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் படம் மார்ச் மாதத்திற்கு தள்ளிப் போகவுள்ளதாகவும் ஒருபுறம் செய்திகள் வெளியாகிவரும் சூழலில் படத்தின் இசை மற்றும் ட்ரெயிலர் ரிலீசுக்கும் படக்குழுவினர் மறுபுறம் தயாராகி வருகின்றனர். டிசம்பர் 26ம் தேதி இந்த நிகழ்ச்சி நடைபெறவுள்ளதாக முன்னதாக தயாரிப்பு தரப்பு அப்டேட் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்வு அடுத்த ஆண்டு ஜனவரி 7ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்ட நிலையில் இசை வெளியீட்டு நிகழ்ச்சி துபாயில் நடைபெறவுள்ளதகாவும் கூறப்படுகிறது.
பொங்கல் ரிலீஸ்?: நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன், ரகுல் பிரீத் சிங், கருணாகரன், யோகிபாபு உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்று சிறப்பிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் நேற்றைய தினம் படம் பொங்கல் பண்டிகைக்குத்தான் ரிலீசாகவுள்ளதாக மற்றொரு பிரமோ மூலம் படக்குழுவினர் மீண்டும் உறுதி செய்துள்ளனர். இதையொட்டி கலக்கலான பிரமோவில் சிவகார்த்திகேயன், யோகிபாபு உள்ளிட்டவர்கள் மிகவும் எளிமையான கெட்டப்பில் காணப்படுகின்றனர். ஏலியனை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்தப் படத்தின் சிஜி வேலைகள் மிக அதிகமான நாட்களை எடுத்துக் கொண்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications