Sivakarthikeyan: பெரிதாக கனவு காணுங்கள்.. இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து அடுக்கிய சிவகார்த்திகேயன்!
சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து பத்து ஆண்டுகளை கடந்து சினிமாவில் நடித்து வருகிறார். கடந்த 2012ம் ஆண்டில் இவரது மெரினா படம் வெளியானது. சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு தாவியவர்களில் இவர் முக்கியமானவராக பார்க்கப்படுகிறார். தன்னுடைய கடுமையான உழைப்பு மற்றும் அடுத்தடுத்த சரியான திட்டமிடல்கள் மூலமாக சிறப்பான நடிகராகவும் தயாரிப்பாளராகவும் சிவகார்த்திகேயன் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வருகிறார். இவரது தயாரிப்பில் டாக்டர் மற்றும் டான் படங்கள் மிகச்சிறப்பாக இவருக்கு கைக்கொடுத்தன.
இந்த படங்களை தொடர்ந்து மிகுந்த எதிர்பார்ப்பிற்கிடையில் வெளியான பிரின்ஸ் படம் சற்று பின்தங்கியது. இருந்த போதிலும் தன்னுடைய அடுத்தடுத்த படங்களான மாவீரன் மற்றும் அயலான் படங்களில் இவர் தன்னை மீண்டும் நிரூபித்துள்ளார். தான் எப்போதும் மாஸ் தான் என்பதை இந்த படங்களின் துணையுடன் அவர் வெளிப்படுத்தியுள்ளார். கடந்த ஜனவரி 12ஆம் தேதி பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியான அயலான் படம் இவருக்கு சிறப்பாக கை கொடுத்துள்ளது. இந்த படம் சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் ஏலியனை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் விஜய் டிவியின் ஆங்கராக தன்னுடைய பயணத்தை துவங்கியவர். தொடர்ந்து தனுசுடன் இணைந்து 3 என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சிவகார்த்திகேயன் நடிப்பு அனைவராலும் என்ஜாய் செய்யப்பட்டது. இருந்தபோதிலும் அடுத்தடுத்த படங்களில் இவர் ஹீரோவாக களம் இறங்கினார். அடுத்தடுத்து மெரினா, மனங்கொத்திப்பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என வித்தியாசமான ஜானர்களில் சிவகார்த்திகேயன் படங்கள் வெளியானது. இந்தப்படங்கள் இவருக்கு சிறப்பாக கை கொடுத்தன.
அடுத்தடுத்த வெற்றிகள்: பக்கத்து வீட்டு பையன் லுக்கில் இருக்கும் சிவகார்த்திகேயன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் தொடர்ந்து கவர்ந்து வருகிறார். சொந்த வாழ்க்கையில் சில விமர்சனங்களை இவர் சமீபத்தில் சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு தற்போது அடுத்தடுத்த வெற்றிகளை குவித்து வருகிறார். தயாரிப்பாளராகவும் இவர் மாஸ் காட்டி வருகிறார். இவரது தயாரிப்பில் டாக்டர் மற்றும் டான் படங்கள் வெளியாகி 100 கோடி கிளப்பில் இணைந்தன. இந்த படங்களை தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி கொடுக்கும் என்று எதிர்பார்ப்பில் வெளியான பிரின்ஸ் படம் இவருக்கு சொதப்பியது.
எஸ்கே 21 படம்: இருந்தபோதிலும் அதிலிருந்து மீண்டு கடந்த ஆண்டில் வெளியான மாவீரன் மற்றும் இந்த கடந்த மாதத்தில் வெளியான அயலான் படங்கள் மூலம் தான் எப்போதுமே மாஸ் தான் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். இந்நிலையில் தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் எண்ட் கார்ட் போட உள்ளது. படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி இந்த படத்தில் இணைந்துள்ளார். படத்தின் ஷூட்டிங் தொடர்ந்து மூன்று மாதங்கள் காஷ்மீரின் கடுமையான பனி படர்ந்த இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டது.
சிவகார்த்திகேயன் இன்ஸ்டாகிராம் போஸ்ட்: தற்போது சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் இந்த படத்தின் சூட்டிங் நடந்து வருகிறது. படம் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் வரும் 17ஆம் தேதி சிவகார்த்திகேயன் பிறந்த நாளை ஒட்டி இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் வரும் 16ம் தேதி மாலை வெளியாக உள்ளதாக படக்குழு சார்பில் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை தன்னுடைய சமூகவலைதளப்பக்கங்களில் பகிர்ந்துள்ளார் சிவகார்த்திகேயன். இன்ஸ்டாகிராமிலும் தான் மிகச்சிறந்த ஃபிட்னஸ் உடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு பெரிய அளவில் கனவு காணுமாறு ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கனவு காணுங்கள்: பெரிய அளவில் கனவு காணுங்கள், பாசிட்டிவ்வாக இருங்கள், கடுமையாக உழையுங்கள் மற்றும் உங்களது பயணத்தை என்ஜாய் செய்யுங்கள் என்று சிவகார்த்திகேயன் இந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார். படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு இன்றைய தினம் வெளியாகியுள்ள நிலையில், அதையொட்டி சிவகார்த்திகேயன் பயிற்சி எடுக்கும் வீடியோவையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ அவரது கடுமையான உழைப்பிற்கு சாட்சியாக அமைந்துள்ளது. சிவகார்த்திகேயனின் ஆரம்ப கால லுக் மற்றும் தற்போதைய மாஸ் லுக்கை ரசிகர்கள் பொருத்திப் பார்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











