Sivakarthikeyan: சிவகார்த்திகேயன் பிறந்தநாள் கொண்டாட்டம்.. SK21 டீமோட பிளான் என்ன தெரியுமா!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனின் அயலான் படம் பொங்கலையொட்டி கடந்த 12ம் தேதி வெளியாகி சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. சிறப்பான வசூலையும் பெற்று வருகிறது. கடந்த ஆண்டில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படமும் மிகப்பெரிய வரவேற்பை சிவகார்த்திகேயனுக்க பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்தடுத்த படங்களின் வெற்றியால் சிவகார்த்திகேயன் மிகுந்த உற்சாகத்தில் உள்ளார். தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார். விரைவில் இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது.

இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். படத்தில் ராணுவ வீரராக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். இதையொட்டி காஷ்மீரீல் இந்தப் படத்தின் சூட்டிங் தொடர்ந்து 3 மாதங்கள் கடுமையான குளிர் மற்றும் பனிப்பொழிவிற்கு இடையில் நடத்தப்பட்டது. தற்போது சென்னை உள்ளிட்ட இடங்களில் படத்தின் சூட்டிங் நடந்து வருகிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு சாய் பல்லவி ஜோடி சேர்ந்துள்ளார். படத்தின் 90 சதவிகித சூட்டிங் நடந்து முடிந்துள்ள நிலையில் இன்னும் 10 சதவிகித சூட்டிங் நடத்தப்பட உள்ளது.

Actor Sivakarthikeyans SK21 movie title and first look to be revealed on his birthday next month

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த ஆண்டில் வெளியாகி மாவீரன் படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. தொடர்ந்து கடந்த 12ம் தேதி பொங்கல் பண்டிகையையொட்டி சிவகார்த்திகேயன் -ரவிக்குமார் கூட்டணியில் அயலான் படம் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. விமர்சனரீதியாகவும் வசூல்ரீதியாகவும் இந்தப் படம் சிவகார்த்திகேயனுக்கு சிறப்பாக கைக்கொடுத்துள்ளது. ஏலியனை மையமாக வைத்து சயின்ஸ் பிக்ஷன் படமாக வெளியான இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் ரவிக்குமார் -ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் இணையவுள்ளதாக முன்னதாக சிவகார்த்திகேயன் தெரிவித்திருந்தார்.

மீண்டும் இணையும் அயலான் டீம்: விரைவில் சிவகார்த்திகேயன் -ரவிக்குமார் -ஏஆர் ரஹ்மான் கூட்டணியில் உருவாகும் படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம். இந்நிலையில் தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் எஸ்கே 21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவம் தயாரித்து வருகிறது. படத்தின் சூட்டிங் காஷ்மீர், சென்னை, பாண்டிச்சேரி உள்ளிட்ட இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 90 சதவிகித சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இன்னும் 10 சதவிகித சூட்டிங் பாக்கி உள்ளதாக படக்குழு சார்பில் அப்டேட் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எஸ்கே21 படம்: இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். படத்தின் டைட்டில் அறிவிக்கப்படாமலே 90 சதவிகித சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அடுத்தமாதம் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி பிப்ரவரி 17ம் தேதி இந்தப் படத்தின் டைட்,டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படம் ராணுவ மற்றும் போர்க்காட்சிகளை அதிகமாக கொண்ட ஆக்ஷன் படமாக உருவாகியுள்ள நிலையில், இந்தப் படம் சிவகார்த்திகேயன் கேரியரில் மிகப்பெரிய படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எஸ்கே 21 படத்தின் டைட்டில்: இதையொட்டி முன்னதாக சிவகார்த்திகேயன் தன்னுடைய பேட்டியில் எஸ்கே21 படம் சோதனை முயற்சியாகவே உருவாகிவருவதாக தெரிவித்திருந்தார். இந்தப் படத்தை தொடர்ந்து ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் இணையவுள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் அவர் போலீஸ் அதிகாரியாக நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆக்ஷன் என்டர்டெயினராக உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங் வரும் மார்ச் மாதத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே எஸ்கே 21 படத்தின் டைட்டில் அறிவிப்பு அவரது பிறந்தநாளை வெளியாகவுள்ளதாக கூறப்படும் தகவல்கள் அவரது ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X