Sivakarthikeyan: ஆக்ஷன் ஹீரோவாக மாஸ் காட்டும் சிவகார்த்திகேயன்.. SK21 டைட்டில் -டீசர் ரிலீஸ் அப்டேட்!

சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களை கவனத்திற்கு உள்ளாகி வருகின்றன. கடந்த ஆண்டில் வெளியான மாவீரன், கடந்த ஜனவரியில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான அயலான் என அடுத்தடுத்த படங்களின் வெற்றி அவரை மீண்டும் ரசிகர்களின் விருப்பத்திற்குரிய நாயகன்தான் என நிரூபித்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதனிடையே இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.

வரும் 17ம் தேதி நடிகர் சிவகார்த்திகேயன் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரைக் காட்டிலும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் அவரது ரசிகர்கள் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் இந்த பிறந்தநாளில் சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் வெளியாகவுள்ளதாக முன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்நிலையில் இவற்றுடன் சேர்த்து படத்தின் டீசரும் வெளியாகவுள்ளதாக தற்போது படக்குழுவினர் அப்டேட் தெரிவித்துள்ளனர். சிவகார்த்திகேயனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் இந்தத் தகவலை உற்சாகத்துடன் பகிர்ந்துள்ளார்.

Actor Sivakarthikeyans SK21 movie title and teaser update released

நடிகர் சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயனின் அடுத்தடுத்த படங்கள் கோலிவுட்டில் அவரது மாஸான மாற்றத்தை பதிவு செய்து வருகின்றன. 3 படத்தில் தனுஷை வெறித்து வெறித்து பார்த்தே ஏராளமான ரசிகர்களை கொள்ளைக் கொண்டவர் சிவகார்த்திகேயன். தொலைக்காட்சியில் இருந்து சினிமாவிற்கு என்ட்ரி கொடுத்த இவர், மிகப்பெரிய காமெடியனாக வருவாரா என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் காலம் அவருக்கு வேறு மாதிரியான திட்டத்தை வகுத்திருந்தது அவரது அடுத்தடுத்த படங்களிலேயே நிரூபணமானது. எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம் என ரசிகர்களை தொடர்ந்து என்டர்டெயின் செய்துவந்த சிவகார்த்திகேயனின் பயணம் ஆச்சர்யத்தை கொடுத்து வருகிறது.

ஆக்ஷன் ஹீரோ அவதாரம்: சரி இவருக்கு காமெடிதான் சிறப்பாக வருகிறது, தொடர்ந்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்களைத்தான் தருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், காக்கிச்சட்டை என்ற சிறப்பான ஆக்ஷன் படத்தை கொடுத்து அனைவரின் புருவங்களையும் உயர்த்த செய்த சிவகார்த்திகேயன் தொடர்ந்து சிறப்பான மாஸ் படங்களை கொடுத்து வருகிறார். டாக்டர், டான் என அடுத்தடுத்த வித்தியாசமான படங்களை கொடுத்த சிவகார்த்திகேயன், நடிகராகவும் தயாரிப்பாளராகவும் தொடர்ந்து அனைவரையும் கவர்ந்து வருகிறார். இடையில் பிரின்ஸ் படம் சொதப்பிய நிலையில், அவரது திரைப்பயணம் உடனடியாக சுதாரித்துக் கொண்டது. அவரும்தான்.

Actor Sivakarthikeyans SK21 movie title and teaser update released

எஸ்கே21 படம்: கடந்த ஆண்டில் வெளியான மாவீரன் மற்றும் கடந்த மாதத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி வெளியான அயலான் படங்கள் அடுத்தடுத்து சிவகார்த்திகேயனுக்கு வசூல் ஹீரோ என்ற பெயரை பெற்றுத் தந்துள்ளது. இந்நிலையில் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் எஸ்கே21 படத்தில் நடித்துவருகிறார். இந்தப் படத்தின் சூட்டிங் இன்னும் சிறிது நாட்களில் எண்ட் கார்ட் போடவுள்ளது. இன்னும் டைட்டில் அறிவிக்கப்படாத இந்தப் படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி அறிவிக்கப்பட உள்ளதாக முன்னதாக கூறப்பட்டிருந்தது.

எஸ்கே 21 படத்தின் டைட்டில் & டீசர்: இந்நிலையில் தற்போது வரும் 17ம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்தநாளையொட்டி 16ம் தேதி மாலை படத்தின் டைட்டில், பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகவுள்ளதாக தற்போது சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழு அறிவித்துள்ளது. இதையொட்டி சிவகார்த்திகேயனின் வீடியோவையும் பகிர்ந்துள்ளனர். இந்த வீடியோவில் மாஸ் லுக்கில் சிவகார்த்திகேயன் காணப்படுகிறார். படத்தில் ராணுவ வீரராக அவர் நடித்துள்ள நிலையில், தன்னுடைய உடல்கட்டை சிறப்பாக ஏற்றியுள்ளார். அந்த வீடியோ மட்டுமில்லாமல் டீசர் உள்ளிட்டவை குறித்த அறிவிப்பும் ரசிகர்களை கொண்டாட செய்துள்ளது. அறிவிப்பையே மாஸ் செய்துள்ளது படக்குழு, கண்டிப்பாக படத்தின் டைட்டில், டீசர் உள்ளிட்டவை அதிரடியாக வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X