Actor Kavin: கவினுடன் ஜோடி சேரும் பிரியங்கா.. யாரு தயாரிப்பு தெரியுமா?
சென்னை: நடிகர் கவினின் லிஃப்ட், டாடா படங்களின் வெற்றி அவருக்கு ரசிகர்களிடையே வரவேற்பையும் அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்துள்ளன.
தற்போது கோலிவுட்டில் அதிகமான படங்களில் கமிட்டாகியுள்ள ஹீரோ என்ற பெருமையும் கவினுக்கு கிடைத்துள்ளது.

கோலிவுட்டின் நம்பிக்கைக்குரிய ஹீரோவாக மாறியுள்ள கவின் அடுத்ததாக நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
நடிகர் கவின்: நடிகர் கவின் நடிப்பில் லிஃப்ட், டாடா என அடுத்தடுத்த வெற்றிப்படங்கள் மாஸ் காட்டிய நிலையில் அவருக்கு கோலிவுட்டில் இந்தப் படங்கள் சிறப்பான வரவேற்பையும் பட வாய்ப்புகளையும் பெற்றுத் தந்து வருகின்றன. அடுத்தடுத்து சிறப்பான கூட்டணியில் இணைந்து படங்களில் நடித்து வருகிறார் கவின். இந்தப் படங்கள் அடுத்தடுத்து ரிலீசாகவுள்ள நிலையில் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்புகளுக்கு இந்தப் படங்கள் உள்ளாகியுள்ளன.
பிப்ரவரியில் ரிலீசாகும் ஸ்டார் படம்: இதில் கவினின் ஸ்டார் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன்ஸ் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. படம் பிப்ரவரி 9ம் தேதி ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்திற்கு யுவன் இசையமைத்துள்ள நிலையில் படத்தின் ஆடியோ ரைட்ஸ் விற்பனை ஆகியுள்ளது. சோனி மியூசிக் இந்த ஆடியோ ரைட்சை கைப்பற்றியுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து கவின் அடுத்தடுத்த முன்னணி கூட்டணிகளுடன் இணைந்து வருகிறார்.
நெல்சன் தயாரிப்பில் கவின்: கவினின் 6வது படத்தை இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிக்கவுள்ள நிலையில், அவரது உதவி இயக்குநர் சிவபாலம் படத்தை இயக்க கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் நடிகர் எஸ்ஜே சூர்யாவும் நடிக்கவுள்ள நிலையில் கவினுக்கு பிரியங்கா மோகன் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தின் சூட்டிங் துவங்கியுள்ள நிலையில் கவின், எஸ்ஜே சூர்யா காம்பினேஷன் காட்சிகள் மைசூரில் படமாக்கப்பட்டுள்ளன.
கவினுடன் இணைந்த எஸ்ஜே சூர்யா: இந்தப் படத்தில் நடிப்பு அரக்கன் என்று கூறப்படும் எஸ்ஜே சூர்யா மற்றும் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துவரும் பிரியங்கா மோகன் கவினுடன் இணைந்துள்ள நிலையில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும் இயக்குநராக தன்னை சிறப்பான வெளிப்படுததியுள்ள நெல்சன் திலீப்குமார் இந்தப் படத்தின்மூலம் தயாரிப்பாளராக மாறியுள்ளார். அவரது உதவி இயக்குநர் இந்தப் படத்தை இயக்கிவரும் நிலையில் படம் கண்டிப்பாக வெற்றிப்படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த கவின்: தன்னுடைய இயல்பான நடிப்பால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்தவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்ற இவர், அந்த நிகழ்ச்சியில் தன்னுடைய நண்பர் பிரதீப்பிற்காக சமீபத்தில் குரல் கொடுத்திருந்தார். மேலும் இவர்கள் இருவரின் பேட்டிகளும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தன. இந்நிலையில் டாடா படம் மூலம் தன்னுடைய இயல்பான நடிப்பால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ள கவினுக்கு இந்தப் படமும் சிறப்பாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications











