விஜய் சேதுபதிக்கு இன்று பிறந்தநாள்… சூரி எப்படி வாழ்த்தினார் தெரியுமா?
சென்னை : ரசிகர்களால் அன்போடு மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.
அவருக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் சமூக வலைதளம் வாயிலாக வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
பல வருடங்களாக, பல போராட்டங்களை சந்தித்தும், சிறு சிறு கதாப்பாத்திரங்களை ஏற்று நடித்தும் இன்று தனக்கென ஒரு இடத்தை ரசிகர்களின் மனதில் பிடித்து வெற்றி நாயகனாக வலம் வருகிறார் விஜய்சேதுபதி.

ஸ்டார் அண்டு மாஸ்
ஸ்டார் அண்டு மாஸ் ஹீரோ யாருனா அது நம்ம விஜய்சேதுபதி தான். எளிமையின் அடையாளமாகவும், ஈகோ கொஞ்சம் கூட இல்லாதவராகவும் , எந்த சமூக பிரச்சினையாக இருந்தாலும் தனியா கெத்தா வந்து தனது கருத்தை வெளிப்படையா தெரிவிக்கும் ஒரு மாஸ் அண்டு கிளாஸ் ஹீரோவாக உள்ளார் விஜய்சேதுபதி.

எதார்த்தமான நடிகர்
தாடி வைத்த முகமும், வாரப்படாத தலை முடியும், மேக்கப் இல்லாத முகமும், என கிட்டத்தட்ட நம் பக்கத்து வீட்டு நபர் போல எதார்த்தமாக இருப்பது தான் விஜய் சேதுபதியின் பிளஸ், இவரின் இயல்பான நடிப்பு இவரை அடுத்த நிலைக்கு கொண்டு சென்றது.

விஜய் சேதுபதி பிறந்தநாள்
விஜய் சேதுபதி இன்று தனது 44வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார் அவருக்கு திரைப்பிரபலங்கள்,அவரது தீவிர ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நகைச்சுவை நடிகர் சூரி தனது ட்விட்டர் பக்கத்தில் விஜய் சேதுபதியுடன் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ஹேப்பி பர்த்டே விஜய்சேதுபதி மாமா என பதிவிட்டுள்ளார்.

பல படங்களில்
நடிகர் சூரி விஜய்சேதுபதியுடன் சுந்தர பாண்டியன்,ரம்மி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இந்த திரைப்படங்களில் சூரி காமெடியனாக நடித்திருந்தார். தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் விடுதலை திரைப்படத்தில் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் சேதுபதி கைதியாக நடித்துள்ளார். சூரி போலீசாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











