Soori: எப்பவும் என்னோட தம்பி சிவகார்த்திகேயன்தான் என்னோட ஹீரோ.. உருகி பேசிய சூரி!
திருச்சி: நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், கென் கருணாஸ், சேத்தன் உள்ளிட்டவர்களுடன் இணைந்து நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை 2 படம் நேற்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடையே பெற்று வருகிறது. அழுத்தமான கதைக்களத்தின்மூலம் இந்தப் படத்தில் வாத்தியாராக நடிகர் விஜய் சேதுபதியை உலவ விட்டுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.
விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர் மற்றும் சூரி ஆகியோருக்கு மட்டுமில்லாமல் கென் கருணாசின் கேரக்டரும் இந்தப் படத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் திருச்சியில் இந்தப் படத்தை நேற்றைய தினம் ரசிகர்களுடன் இணைந்து பார்த்த நடிகர் சூரி, படத்தை ரசிகர்கள் கொண்டாடுவது குறித்து உற்சாகத்தை பகிர்ந்திருந்தார்.

விடுதலை 2 படம்: நடிகர் விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி, கென் கருணாஸ், சேத்தன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து நேற்றைய தினம் திரையரங்குகளில் விடுதலை 2 படம் ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சர்வதேச பாக்ஸ் ஆபீசில் இந்தப் படம் முதல் நாளில் 8 கோடி ரூபாய்களை தாண்டி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் அடுத்தடுத்து வார நாட்களில் இந்தப் படம் அதிகமான ரசிகர்களை திரையரங்குகளை நோக்கி வரவழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த ஆண்டில் வெளியான இந்தப் படத்தின் முதல் பாகத்தில் சூரியின் கான்ஸ்டபள் குமரேசன் கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. படமும் சிறப்பான விமர்சனங்களை பெற்றது.
பலம் சேர்த்த இளையராஜா: இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள விடுதலை 2 படத்தில் விஜய் சேதுபதியின் இளமை காலத்தை மையமாக கொண்டு காட்சி அமைப்புகள் கையாளப்பட்டுள்ளன. படத்தில் மகாலட்சுமியாக மஞ்சு வாரியர் நடித்துள்ள நிலையில், இவர்களின் ரொமான்ஸ் சிறப்பாக ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளன. இவர்களின் லுக், படத்தின் ரிலீசுக்கு முன்னதாகவே ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நிலையில், தற்போது படமும் அதை தொடரவே செய்கிறது. முதல் பாகத்தை போலவே இளையராஜாவின் இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளன.
சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய சூரி விருப்பம்: இந்நிலையில் நேற்றைய தினம் படத்தின் ரிலீசையொட்டி திருச்சியில் பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் படத்தை பார்த்த நடிகர் சூரி, படம்குறித்த உற்சாகத்தை பகிர்ந்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், திருச்சியிலும் விடுதலை 2 படத்தை ரசிகர்கள் கொண்டாடுவதாக கூறியுள்ளார். இந்தப் படம் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படமாக அமையும் என்று கூறியுள்ள அவர், இனிமேலும் தொடர்ந்து ஹீரோவாகவே நடிப்பேன் என்று மறுபடியும் உறுதி செய்துள்ளார். தொடர்ந்து பேசிய அவர், நல்ல கதை அமைந்தால் சிவகார்த்திகேயனுடன் இணைந்து மீண்டும் நடிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயன்தான் எனக்கு ஹீரோ: அப்படி அமையும் படத்தில் யார் ஹீரோ என்பதை சிவகார்த்திகேயன்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் தனக்கு எப்போதும் தன்னுடைய தம்பி சிவகார்த்திகேயன்தான் ஹீரோ என்றும் சூரி மேலும் தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன் -சூரி காம்பினேஷனில் முன்னதாக வெளியான வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் உள்ளிட்ட படங்கள் ரசிகர்களின் எவர்கிரீன் ஃபேவரிட் படங்களாக உள்ள நிலையில்
தொடர்ந்து ஹீரோவாக நடித்தாலும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க தயாராக உள்ளதாக சூரி கூறியுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கி உள்ளது.


Click it and Unblock the Notifications











