தமிழில் தலைப்பு.. சூரியை பார்த்து முன்னணி நடிகர்கள் கத்துக்கோங்க.. ’மே’ மாதத்தில் பூத்த மாமன்!

சென்னை: தமிழ் திரையுலகில் வெளியாகும் பாடல்களில் கூட தமிழ் இல்லை என சமீபத்தில் அனுராக் காஷ்யப் கடுமையான விமர்சனத்தை முன் வைத்து இருந்தார். அனிருத் வெஸ்டர்ன் இசையை தாண்டி கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொள்ள வேண்டும் என ஏ.ஆர். ரஹ்மானும் மேடை ஒன்றில் வெளிப்படையாகவே கூறியிருந்தார்.

தமிழ் படங்கள் முன்பு போல தமிழ் படங்களாக வருவதில்லை என்றும் பான் இந்தியா மோகத்தால் திசை மாறி விட்டதாகவும் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் கிளம்பியுள்ளன. வசூல் ரீதியாக பார்த்தால் தமிழ் படங்கள் பான் இந்தியாளவில் பெரிய வெற்றியை பெறவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

Actor Soori picked Good Tamil Titles for his movies is the need of the hour

இந்நிலையில், முன்னணி நடிகர்கள் படங்களின் தலைப்புகள் கூட தமிழில் இல்லையே ஏன்? என்கிற கேள்வி எழத்தான் செய்கிறது. ஆனால், நடிகர் சூரி தொடர்ந்து தனது படங்களுக்கு தமிழில் தலைப்பு வைத்து வெற்றி பெற்று வரும் நிலையில், சூரியை பார்த்து மற்ற முன்னணி நடிகர்கள் பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அஜித் குமாரையே மாத்திட்டாங்க: நடிகர் விஜய் மாஸ்டர், பீஸ்ட், லியோ, கோட் என தொடர்ந்து ஆங்கில தலைப்புகளில் நடித்து வந்த நிலையில், அஜித் குமார் நேர்கொண்ட பார்வை, வலிமை, விவேகம், துணிவு, விடாமுயற்சி என தமிழில் தான் தலைப்பு வைத்து நடித்து வந்தார். ஆனால், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடித்த படத்துக்கு 'குட் பேட் அக்லி' என ஆங்கில தலைப்பு வைத்து அவரையும் மாத்திட்டாங்க.

Actor Soori picked Good Tamil Titles for his movies is the need of the hour

டிராகன் முதல் டிடி நெக்ஸ்ட் லெவல் வரை: இந்த ஆண்டு வெளியான பல படங்கள் ஆங்கில தலைப்பையே தேர்வு செய்துள்ளன. பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே, டிராகன், எல்ஐகே, டூட் என தொடர்ந்து ஆங்கிலத்தில் மட்டுமே படத் தலைப்புகளை வைத்து வருகிறார். மே 1ம் தேதி வெளியான சூர்யாவின் ரெட்ரோ மற்றும் சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட படங்களுக்கும் ஆங்கில தலைப்பு தான். கடைசியாக கடந்த வாரம் சந்தானம் நடிப்பில் வெளியான டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தின் தலைப்பும் ஆங்கில தலைப்பு தான்.

Actor Soori picked Good Tamil Titles for his movies is the need of the hour

தமிழ் தலைப்புகள்: நடிகர் சூரி, வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை படத்தில் நடித்தார். விடுதலை 1 மற்றும் 2, கருடன், கொட்டுக்காளி, கடந்த வாரம் வெளியான மாமன், அடுத்து நடித்து வரும் மண்டாடி என அனைத்து படங்களின் தலைப்புகளும் தமிழில் வைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. மே மாதம் வெளியான ரெட்ரோ, டூரிஸ்ட் ஃபேமிலி, டிடி நெக்ஸ்ட் லெவல் படங்களுக்கு நடுவே 'மாமன்' படத்தின் மூலம் வெற்றியை ருசித்திருக்கிறார் சூரி.

Take a Poll

சூரியை பார்த்து கத்துக்கோங்க: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் காமெடி நடிகராக இருந்து கதையின் நாயகனாக மாறியுள்ள சூரியை பார்த்து பல விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும் என ரசிகர்கள் கூறுகின்றனர். தமிழ் தலைப்புகளை நன்றாக தேர்வு செய்து வெற்றி காண முடியும் என்கின்றனர். மேலும், இப்பவே நல்லா சம்பாதிச்சிட்டேன், நல்ல நல்ல கதைகளில் நடிக்க வேண்டும் என சூரி பேசியது போல மற்ற நடிகர்களும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்கின்றனர். போலீஸ் அல்லது கேங்ஸ்டர் கதைகளில் மட்டுமே முன்னணி நடிகர்கள் நடிப்பதை தவிர்த்தால் நலம் என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X