twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அப்படியெல்லாம் விட்ர முடியாதுங்க தலைவரே.. சிவகார்த்திகேயனுக்கு அதிரடியாய் பதில் சொன்ன சூரி!

    |

    சென்னை: நடிகர் சிவகார்த்திகேயனுக்கு நகைச்சுவை நடிகர் சூரி டிவிட்டரில் கூறியிருக்கும் பதில் பெரும் வைரலாகி வருகிறது.

    மதுரையை பூர்விகமாக கொண்டவர் நடிகர் சூரி. பல படங்களில் கிடைத்த ரோல்களில் நடித்துள்ளார்.

    ஜெயம் ரவியை இயக்க போகும் மாஸ் ஹீரோ...வெளியான அசத்தல் தகவல் ஜெயம் ரவியை இயக்க போகும் மாஸ் ஹீரோ...வெளியான அசத்தல் தகவல்

    சில படங்களில் ஹீரோவுக்கு பின்னணியிலும் கூட்டத்தோடு கூட்டமாகவும் ஆளே தெரியாத அளவுக்கு நடித்துள்ளார்.

    8 மாத குழந்தை கிளாடி சாராவின் இதயநோய் சிகிச்சைக்கு உதவுங்கள் ப்ளீஸ்

    சூரிக்கு பெரும் அடையாளம்

    சூரிக்கு பெரும் அடையாளம்

    சிறு சிறு கதாப்பாத்திரங்களில் நடித்து வந்த சூரி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். முழுக்க முழுக்க தன்னுடைய உழைப்பால் உயர்ந்துள்ளார் சூரி. நடிகர் சூரிக்கு பெரும் அடையாளத்தை கொடுத்த படம் வெண்ணிலா கபடி குழு. இந்த படத்தின் மூலம் பெரும் பிரபலமானார் சூரி.

    எல்லா கோட்டையும் அழி

    எல்லா கோட்டையும் அழி

    இப்படத்தில் சுப்பிரமணி கதாப்பாத்திரத்தில் நடித்த சூரி பரோட்ட காமெடி மூலம் ரசிகர்கள் மத்தியில் நன்கு பரிட்சயமானார். இந்த படத்தில் பரோட்டா சாப்பிடும் போட்டியில் ஏமாற்ற முயற்சிக்கும் கடைக்காரரிடம் எல்லா கோட்டையும் அழி, நாம முதல்லேருந்து விளையாடலாம் என்று கூறி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்திப்பார்.

    ரஜினியுடன் அண்ணாத்த படத்தில்

    ரஜினியுடன் அண்ணாத்த படத்தில்

    இந்த படத்திற்கு முன்பு வரை வெறும் சூரியாக இருந்த அவர், வெண்ணிலா கபடி குழு படத்திற்கு பிறகு பரோட்டோ சூரி என அழைக்கப்பட்டு வருகிறார். விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் என பெரும்பாலான முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் சூரி. தற்போது ரஜினிகாந்தின் அண்ணாத்த படத்திலும் நடித்து வருகிறார் சூரி.

    சூரி - சிவகார்த்திகேயன் நட்பு

    சூரி - சிவகார்த்திகேயன் நட்பு

    நடிகர் சூரி சிவகார்த்திகேயனுடன் இணைந்து கேடி பில்லா கில்லாடி ரங்கா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா உள்ளிட்ட நான்கு படங்களில் நடித்துள்ளார். சூரிக்கும் சிவகார்த்திகேயனுக்கும் படங்களில் பக்காவாக கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகும். இருவரும் நடிகர்கள் என்பதையும் தாண்டி நெருங்கிய நண்பர்களாகவும் வலம் வருகிறார்கள்.

    சினிமாவை தாண்டியும் நல்ல நட்பு

    சினிமாவை தாண்டியும் நல்ல நட்பு

    சமூக வலைதளங்களிலும் இருவரும் நல்ல நண்பர்களாக வலம் வருகிறார்கள். இருவரும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கலாய்த்து வருகிறார்கள். தற்போது சிவகார்த்திகேயனின் டான் படத்திலும் நடித்து வருகிறார் சூரி. கோவை, பொள்ளாச்சி, ஆணைமலை பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது. அப்போது இருவரும் பைக்கில் சென்ற போட்டோக்களும் வீடியோக்களும் வெளியாகி வைரலானது.

    சூரிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

    சூரிக்கு சிவகார்த்திகேயன் வாழ்த்து

    இந்நிலையில் நடிகர் சூரி கடந்த 27ஆம் தேதி தனது 44வது பிறந்த நாளை கொண்டாடினார். இதனை முன்னிட்டு சினிமா பிரபலங்களும் ரசிகர்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து மழை பொழிந்தனர். அந்த வகையில் சூரியின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயனும் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார்.

    சங்கத்துக்கு வேற செயலாளர்தான் பாக்கணும்

    சங்கத்துக்கு வேற செயலாளர்தான் பாக்கணும்

    இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் சூரியின் கலக்கல் வீடியோ ஒன்றை ஷேர் செய்திருந்தார் சிவகார்த்திகேயன். மேலும் அந்த வீடியோவுடன் எதிர் நீச்சல் அடி வென்று ஏற்று கோடி.. ஆள் செமயா இருக்கீங்க... இனி ஃபுல்லா ஹீரோதான்.. நாங்க சங்கத்துக்கு வேற செயலாளர்தான் பாக்கணும் போல.. என் அன்பு அண்ணனுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.. ஆல்வேஸ் லவ் யூ அண்ணா.. என குறிப்பிட்டிருந்தார்.

    அப்படியெல்லாம் விட்ர முடியாதுங்க தலைவரே

    அப்படியெல்லாம் விட்ர முடியாதுங்க தலைவரே

    இந்நிலையில் சிவகார்த்திகேயனின் அந்த பதிவுக்கு நடிகர் சூரி பதில் அளித்துள்ளார். அவர் பதிவிட்டிருப்பதாவது, அப்படியெல்லாம் விட்ர முடியாதுங்க தலைவரே.. சர்கஸ்ன்னா சிங்கம் இருக்கணும் சங்கம்ன்னா செயலாளர் இருக்கணும்.. ஆ... ரொம்ப நன்றிங்க தம்பி.. லவ் யூ தம்பி.. என குறிப்பிட்டுள்ளார்.

    உங்களோட டைமிங் இருக்கே

    உங்களோட டைமிங் இருக்கே

    சூரியின் பதிலை பார்த்த இந்த நெட்டிசன், அண்ண உங்க ரெண்டு பேரையுமே யாரும் அடிச்சிக்க முடியாது அண்ணா.. உங்களோட டைமிங் இருக்கே... வெய்ட்டிங் ஃபார் டான் அண்ணா.. என கூறியுள்ளார்.

    எப்பவும் இப்படியே இருக்கணும்

    எப்பவும் இப்படியே இருக்கணும்

    மற்றொரு ரசிகரான இவர் அண்ண நீங்க ரெண்டு பேரும் எப்பவும் இப்படியே இருக்கணும்.. எங்க எல்லோரோட ஆசையும் அதான்.. சீக்கிரம் உங்க ரெண்டு பேரையும் ஸ்க்ரீன்ல பாக்கணும்.. நன்றி ணா.. இன்னைக்கு என் இன்ஸ்டா போஸ்ட்ட லைக் பண்ணதுக்கு.. எப்போவும் ஹேப்பியா இருங்க என பதிவிட்டுள்ளார்.

    ஓரமா போய் சண்ட போட்டுக்குங்க

    ஓரமா போய் சண்ட போட்டுக்குங்க

    மற்றொரு ரசிகரான இவர் சரி ரெண்டு பேரும் அங்கிட்டு ஓரமா போய் சண்ட போட்டுக்குங்க பா.. போஸ் பாண்டி & கோடி.. 8 ஆண்டுகள் வருத்த படாத வாலிபர் சங்கம்.. இன்னமும் அற்புதம்.. என பதிவிட்டுள்ளார்

    எப்பவும் இதேபோல இருக்கணும்

    எப்பவும் இதேபோல இருக்கணும்

    மற்றொரு ரசிகரான இவர் சூரி அண்ணே உங்க ரெண்டு பேரோட நட்பு எப்போவும் இதே போல இருக்கணும்.. மீண்டும் பிறந்தநாள் வாழ்த்துகள் சூரி அண்ணே என பதிவிட்டுள்ளார்

    செயலாளர் நீங்கதான் கோடி

    செயலாளர் நீங்கதான் கோடி

    மற்றொரு ரசிகரான இந்த நெட்டிசன், எப்பவும் #வருத்தப்படாத வாலிபர் சங்கம் செயலாளர் நீங்க தான் கோடி என பதிவிட்டுள்ளார்.

    English summary
    Actor Sivakarthikeyan congratulated Soori on his birthday. Actor Soori has responded to Sivakarthikeyan's post.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X