‘விடுதலை‘யில் சூரிக்கு ஜோடி இவங்களா? வெளியான சூடான தகவல் !

சென்னை : சூரி கதாநாயகனாக நடிக்கும் விடுதலை படத்தின் கதாநாயகி யார் என்பது தற்போது தெரியவந்துள்ளது.

இப்படத்தில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 6ந் தேதியிலிருந்து தொடங்க உள்ளது.

இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது.

அசுரன் தேசிய விருது

அசுரன் தேசிய விருது

தேசிய விருது பெற்ற தனுஷின் அசுரன் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து இயக்குனர் வெற்றிமாறன் விடுதலை என்ற படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில், இதுநாள் வரை நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த சூரி கதாநாயகனாக அறிமுகமாகி உள்ளார்.

விஜய்சேதுபதி முக்கிய ரோலில்

விஜய்சேதுபதி முக்கிய ரோலில்

விடுதலை என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தில் நடிகர் விஜய்சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார். இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்தை ஆர்எஸ் இன்ஃபோடைன்மென்ட் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் தயாரித்து வருகிறார்.

கான்ஸ்டபிள் சூரி

கான்ஸ்டபிள் சூரி

எழுத்தாளர் ஜெயமோகனின் துணையவன் கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி அனைவரிடத்திலும் பாராட்டை பெற்றது. இதில், சூரி கான்ஸ்டபிள் கெட்டப்பிலும், விஜய்சேதுபதி கைதி கெட்டப்பிலும் அசத்தி இருந்தனர். இந்த படத்திற்காக சூரி கடுமையாக உடற்பயிற்சி செய்து சிக்ஸ் பேக்குடன் போஸ் கொடுத்திருந்தார்.

ஜி வி பிரகாஷின் தங்கை

ஜி வி பிரகாஷின் தங்கை

இந்த படத்தில் நடிப்பவர்கள் பற்றிய விவரம் ரகசியமாக இருந்த நிலையில் இப்போது கதாநாயகி யார் என்பது தெரியவந்துள்ளது. இசையமைப்பாளர் மற்றும் நடிகர் ஜி வி பிரகாஷின் தங்கை பவானி ஸ்ரீ இந்த படத்தில் சூரிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகியது. இவர், விஜய்சேதுபதி ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடி பலரின் பாராட்டை பெற்ற க/பெ ரணசிங்கம் படத்தில் விஜய்சேதுபதியின் தங்கையாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். முதல் படத்திலேயே பவானி ஸ்ரீயின் நடிப்பு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இவர் மீசைய முறுக்கு திரைப்படத்தில் ஹிப்ஹாப் ஆதிக்கு தம்பியாக நடித்த ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் நண்பன் ஒருவன் வந்த பிறகு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.

ஒரே நேரத்தில் 5 மொழியில்

ஒரே நேரத்தில் 5 மொழியில்

இந்த படத்தை பேன் இந்தியா திரைப்படமாக ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம். இதனால் 5 மொழிகளில் ஒரே நேரத்தில் படம் ரிலீஸ் ஆகலாம் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்ததை அடுத்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு செப்டம்பர் 6 ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

வெற்றிமாறன்

வெற்றிமாறன்

இயக்குனர் வெற்றி மாறனின் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் அதிகாரம். இந்த படத்தை இயக்குர் துரை செந்தில் இயக்கி வருகிறார். இதில் நடிகர் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த திரைப்படத்தை எஸ்.கதிரேசன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர். இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X