Actor Soori: நான் மாஸ் ஹீரோ இல்ல.. கருடன் பட வெற்றி பெரும்.. சூரி பேச்சு!
சென்னை: இயக்குனர் துரை செந்தில் இயக்கத்தில் உருவாகி உள்ள கருடன் படத்தில் நடிகர் சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் 31ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூரி, நான் மாஸ் ஹீரோ இல்ல, கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் என்றார்.
கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த, விடுதலைப்படத்திற்கு முன் என்னை காமெடியான பார்த்து இருப்பீர்கள், அதன் பிறகு வேறு மாதிரியான ஒரு ஜானரில் இருந்திருப்பேன். அதே போல் இந்தப் படத்தில் வேறு ஒரு பரிணாமத்தில் இருப்பேன் என நம்புகிறேன் என்றார்.விடுதலைப்படத்தை தொடர்ந்து ஹீரோவாகவே நடிக்க வாய்ப்பு வந்து கொண்டு இருக்கிறது. அதில், எனக்கு தகுந்த கதையை கேட்டு தேர்வு செய்து நடித்துக்கொண்டு இருக்கிறேன். காமெடியனாக வாய்ப்புகள் தற்போது வரவில்லை என்றார்.

நடிகர் சூரி: இந்த படத்தை துரை செந்தில்குமார் இயக்கி உள்ளார். இவர் இதற்கு முன் கொடி, எதிர்நீச்சல் போன்ற படத்தை இயக்கியவர். தற்போது இந்த படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில்,சசிக்குமார் அந்த கேரக்டரில் நடித்தால் நன்றாக இருக்கும் என்று அவரிடம் கேட்டோம் அவர் யோசிக்காமல் ஒகே சொல்லிவிட்டார். அதே போல சமுத்திரக்கனியும் நடித்துள்ளார். விடுதலைப் படத்தில் இருந்தது போலவே இந்த படத்திலும் சிறிது கஷ்டங்கள் இருந்தது. அதற்கான பலன் நிச்சயமாக கிடைக்கும் கருடன் படம் வெற்றி பெரும் என்ற நம்பிக்கை இருக்கு.
மகிழ்ச்சி அடைகிறேன்: காமெடி கதாபாத்திரங்களை நடிக்கும் பொழுது அதற்கான காட்சிகளை மட்டும் நடித்துவிட்டு சென்று விடுவோம், ஆனால், கதாநாயகனாக நடிக்கின்ற போது மிகப்பெரிய பொறுப்புணர்ச்சி இருப்பதாக உணர்கிறேன் என்றார். கதாநாயகனாக வெற்றிமாறன் அளித்த இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கு மெனக்கெட வேண்டியதாக இருக்கிறது. மேலும் தான் கடந்து வந்த பாதையை நினைத்து பெருமை கொள்வதாகவும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். வெற்றிமாறன் இந்த திரைப்படத்தை பார்த்துவிட்டு மிகவும் நன்றாக இருப்பதாகவும் தனக்கு இன்னொரு விடுதலை படமாக இது அமையக்கூடும் என்று சொன்னார்.
சினிமாவில் வெற்றிடமே இல்ல: விடுதலை திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தின் கதாநாயகனாக இருந்த நிலையில் அதிலிருந்து வெளியில் வரும் பொழுது தனக்கு ஒரு மாஸ் என்ட்ரி வைத்து விட்டால் ஒரு பக்கம் தான் தனது வண்டியை விட வேண்டும் என கூறினார். சினிமாவில் எப்பொழுதும் காலி என்பதே இருக்காது, அந்தந்த இடத்திற்கு ஆட்கள் வந்து கொண்டே இருப்பார்கள். இதனால் சினிமாவில் வெற்று இடமே இருக்காது. சினிமா அந்த இடத்திற்கு ஒரு ஆளை தேர்வு செய்து விடும். தான் கதாநாயகனாக நடிக்கும் பொழுது யார் காமெடியன் கதாபாத்திரத்திற்கு சரியாக இருப்பார்களோ அவர்களை கட்டாயமாக தேர்வு செய்து நடிக்க வைப்பேன் என்று நடிகர் சூரி அந்த பேட்டியில் பேசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











