அப்பாவானார் நடிகர் சௌந்தரராஜா… மரக்கன்றை மகளுக்கு பரிசாக அளித்தார் !
சென்னை : தமிழில் படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமான நடிகர் செளந்தரராஜாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது,
குழந்தைகள் தினத்தன்று பெண் குழந்தை பிறந்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார் செளந்தரராஜா.
திரைத்துறை பிரபலங்கள் பலர் இவருக்கு வாழ்த்துக்கூறி வருகின்றனர்.

சௌந்தரராஜா
தமிழில் 2012 ஆம் ஆண்டு வெளியான சுந்தரபாண்டியன் படத்தில் வில்லனாக நடித்தவர் நடிகர் சௌந்தரராஜன். குணசித்ர நடிகரான சௌந்தரராஜன் சுந்தரபாண்டியன் படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்திருப்பார். அந்த திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பரபரப்பாக பேசப்பட்டது.

பல்வேறு படங்களில்
இதையடுத்து, தமிழில் வெளியான பல்வேறு படங்களில் குணசித்ர நடிகராக நடித்துள்ளார். ஜிகிர்தண்டா, றெக்க, தெறி போன்ற படங்களில் வில்லனாக நடித்துள்ளார். மேலும், தெறி திரைப்படத்தில் இவரது நடிப்பு மிகவும் கவனிக்கப்பட்டது. '

பெண் குழந்தை
கடந்த 2018 ஆம் ஆண்டு இவருக்கும் தமன்னா என்பருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிலையில் இந்த தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும்,சேயும் நலமுடன் இருப்பதாக கூறியுள்ள சௌந்தரராஜன், குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தை பிறந்துள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார்.

மரக்கன்று பரிசு
தனது மனைவி மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், இந்த மரக்கன்று இன்று இந்த பூமிக்கு வந்த என் ஆசை மகளுக்கு எனது முதல் பரிசு. உங்கள் அன்புக்கும் ஆசீர்வாதத்திற்கும் எனது மனமார்ந்த நன்றிகள் என்று கூறியுள்ளார். நடிகர் சௌந்தரராஜா சினிமாவை தாண்டி பல சமூக சேவைகளை செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











