பெண் குழந்தைக்கு அப்பாவான பிரபல நடிகர்.. மகளுக்கு மரக்கன்றை பரிசளித்து வரவேற்பு.. குவியும் வாழ்த்து!

சென்னை: பிரபல நடிகரான சவுந்தரராஜா பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ளார்.

மதுரை உசிலம்பட்டியை பூர்வீகமாக கொண்டவர் நடிகர் சவுந்தரராஜா. இன்ஜினியரிங் முடித்த சவுந்தரராஜா சிங்கப்பூர், ஃபிரான்ஸ், கத்தார் என வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளார்.

சினிமா மீது கொண்ட ஆர்வத்தால் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமானார் சவுந்தரராஜா. மதுரை டூரிங் டாக்கிஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார் சவுந்தரராஜா.

வில்லன் நடிகர்

வில்லன் நடிகர்

பல படங்களையும் தயாரித்துள்ள சவுந்தரராஜா கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி மேற்கொண்டார். பின்னர் வேட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு நடிகராக என்ட்ரி கொடுத்தார். பல படங்களில் சிறுசிறு கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். வில்லனாகவும் குணச்சித்திர நடிகராகவும் தனது இருப்பை பதிவு செய்து வருகிறார் சவுந்தரராஜா.

சுந்தர பாண்டியன் படம்

சுந்தர பாண்டியன் படம்

சுந்தரப்பாண்டியன் படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்ததன் மூலம் பெரும் பிரபலமானார். இவர் தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம், ஜிகர்தண்டா, தெறி, பிகில், ஜகமே தந்திரம் போன்ற படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார் சவுந்தரராஜா.

2018ல் திருமணம்

2018ல் திருமணம்

சினிமா மட்டுமின்றி சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார் சவுந்தரராஜா. மறைந்த நடிகர் விவேக்கை பின்பற்றி மரக்கன்றுகளையும் நட்டு வருகிறார் சவுந்தரராஜா. நடிகர் சவுந்தரராஜா, தமன்னா என்பவரை 2018-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.

மகளுக்கு மரக்கன்று பரிசு

மகளுக்கு மரக்கன்று பரிசு

இந்த தம்பதிக்கு நேற்று பெண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமாக இருப்பதாக தெரிவித்துள்ள சவுந்தரராஜா, குழந்தைகள் தினத்தில் பெண் குழந்தை பிறந்தது தனக்கு பெரும் மகிழ்ச்சியை கொடுத்து இருக்கிறது என கூறியுள்ளார். மேலும் தன் மகளுக்கு மரக்கன்று ஒன்றையும் பரிசாக அளித்துள்ளார் சவுந்தரராஜா.

ரசிகர்கள் வாழ்த்து

ரசிகர்கள் வாழ்த்து

சவுந்தரராஜா தனது மனைவி மற்றும் மகளுடன் இருக்கும் போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள் பெண் குழந்தைக்கு அப்பாவாகியுள்ள சவுந்தரராஜாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X