Suriya: வெள்ள பாதிப்பில் சிறப்பாக செயல்பட்ட ரசிகர்கள்.. 50 ஜோடிகள்.. தடபுடல் விருந்து கொடுத்த சூர்யா

சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்த சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். தற்போது அவரது நடிப்பில் கங்குவா படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. படத்தை இயக்குநர் சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. இந்தப் படத்தின் சிஜி வேலைகளும் மறுபுறம் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. சர்வதேச அளவில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் ரிலீசாகவுள்ள கங்குவா படத்தில் திஷா பதானி சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். வில்லனாக பாலிவுட் நடிகர் பாபி தியோல் மிரட்டலான நடிப்பை வழங்கியுள்ளார்.

படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ, போஸ்டர்கள் உள்ளிட்டவை வெளியிடப்பட்டு மாஸ் காட்டிய நிலையில், படம் நாடாளுமன்ற தேர்தலையடுத்து ரிலீசாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் வித்தியாசமான கெட்டப்புகளில் சூர்யாவை பார்க்க முடியும் என்றும் படக்குழுவினர் உற்சாகம் தெரிவித்துள்ளனர். படத்தின் போஸ்டர்கள் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளன. படத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ள நிலையில் பாடல்கள் அனைத்தும் வெகு சிறப்பாக அமைந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளன. நடிகர் சூர்யா நடிப்பு, தயாரிப்பு உள்ளிட்ட தளங்களில் பயணித்துவரும் சூழலில் சூரரை போற்று இந்தி ரீமேக், கார்த்தி 27 ஆகிய படங்களையும் தயாரித்து வருகிறார்.

Actor Suriya arranged feast to his fans recently helped in flood relief

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா, அடுத்தடுத்த சிறப்பான கதைக்களங்களில் தன்னை ஈடுபடுத்தி ரசிகர்களை தன்னுடைய நடிப்பால் கட்டிப் போட்டு வருகிறார். தயாரிப்பாளராகவும் சூரரை போற்று இந்தி ரீமேக், கார்த்தி 27 படம் ஆகியவற்றையும் தயாரித்து வருகிறார். நடிகை ஜோதிகாவும் ஒருபுறம் மிகவும் பிசியாக நடித்து வருகிறார். அடுத்ததாக அவரது நடிப்பில் மாதவன், அஜய் தேவ்கன் இணைந்து நடித்துள்ள ஷைத்தான் படம் ரிலீசாகவுள்ளது. முன்னதாக மம்முட்டியுடன் ஜோதிகா இணைந்து நடித்திருந்த காதல் தி கோர் படம் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தது.

கங்குவா படம்: தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா இணையவுள்ளார். மதுரை உள்ளிட்ட இடங்களில் இந்தப் படத்தின் சூட்டிங் திட்டமிடப்பட்டுள்ளன. அடுத்தடுத்து பாலிவுட் படமான கர்ணா, வாடிவாசல் என சூர்யாவின் சூட்டிங் கேலண்டர் பிசியாகவே காணப்படுகிறது. இதனிடையே சமூக நலப்பணிகளிலும் தன்னை முன்னிறுத்தி செயல்பட்டு வருகிறார்.

ரசிகர்களுக்கு விருந்து: அகரம் பவுண்டேஷன் மூலம் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவி செய்து வருகிறார். நடிகர் கார்த்தியும் உழவன் பவுண்டேஷன் மூலம் விவசாயிகளுக்கு உதவி வருகிறார். இதனிடையே கடந்த ஆண்டில் தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டபோது பொதுமக்களுக்கு உணவு, உள்ளிட்டவற்றை கொடுத்து உதவிகரமாக இருந்த ரசிகர் மன்ற நிர்வாகிகளை சென்னைக்கு வரவழைத்து அவர்களுக்கு தடபுடலாக விருந்தளித்து உபசரித்துள்ளார். மேலும் இதன்போது அண்மையில் திருமணமான 50 ஜோடிகளுக்கும் அவர் விருந்தளித்து உபசரித்துள்ளார். சென்னையில் மிக்ஜாம் புயலின்போதும் சிறப்பாக செயல்பட்ட ரசிகர்களுக்கும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சூர்யா நெகிழ்ச்சி: இதனிடையே நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, பொதுமக்களின் நெருக்கடியான சூழலில் நாங்கள் இருக்கிறோம் என்று கூறிவிட்டு அவர்களை அந்த இக்கட்டிலிருந்து தன்னுடைய ரசிகர்கள் காப்பாற்றியது குறித்து தான் மிகந்த நெகிழ்ச்சியடைந்ததாகவும் கூறியுள்ளார். ரசிகர்களின் ஆண்டு கால எதிர்பார்ப்பாக சூர்யா -வெற்றிமாறன் கூட்டணியில் அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படம் இருந்து வருகிறது. இந்தப் படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகிவரும் சூழலில் இந்த தகவல் அடிப்படை ஆதாரம் இல்லாதது என்று தயாரிப்பாளர் தனஞ்செயன் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X