Actor Suriya: கர்ணா.. வாடிவாசல்.. சூர்யாவின் பிளான் என்ன தெரியுமா?

சென்னை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் அவரது ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்து வருகிறது. அவரது கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் ஜரூராக நடந்து வருகிறது. படம் வரும் ஆக்ஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சிவா. அவரது இயக்கத்தில் முன்னதாக கமர்ஷியல் படங்கள் மட்டுமே வெளியான நிலையில் வித்தியாசமாக வரலாற்று பின்னணியில் அவர் கங்குவா படத்தை இயக்கியுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது சுதா கொங்கராவுடன் புறநானூறு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா. தன்னுடைய 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் இந்தப் படத்தை தயாரிக்கவும் உள்ளார். முன்னதாக சுதா கொங்கரா -சூர்யா கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடையே ரீச் ஆனது. அதிகமான தேசிய விருதுகளையும் அள்ளியது. பயோ பிக்காக இந்தப் படம் வெளியான நிலையில் தற்போது புறநானூறு படம் உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ளதாக முன்னதாக படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா தெரிவித்திருந்தார்.

Actor Suriya going to act Karna & Vaadivaasal movies simultaneously it seems

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் அவரது ரசிகர்களின் எண்ணிக்கையை உயர்த்தி வருகிறது. கோலிவுட்டின் முன்னணி நடிகராக, தயாரிப்பாளராக மாறியுள்ளார் சூர்யா. அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் அடுத்தடுத்த படங்கள் வெளியாகி வருகின்றன. தன்னுடைய நடிப்பில் மட்டுமில்லாமல் தன்னுடைய தம்பி கார்த்தி உள்ளிட்டோர் நடிப்பிலும் படங்களை தயாரித்து வருகிறார் சூர்யா. தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படம் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. படத்தில் 10க்கும் மேற்பட்ட கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கங்குவா படம்: முன்னதாக படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ உள்ளிட்டவை வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளன. படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் 10 மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் படம் வெளியாகவுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கராவுடன் இணைந்து புறநானூறு படத்தில் சூர்யா கமிட்டாகியுள்ளார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக அவர் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. உண்மை சம்பவங்களின் அடிப்படையில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அவருடன் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் இணைந்து நடிக்கவுள்ளனர்.

அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்ததாக பாலிவுட்டிலும் ராகேஷ் ஓம்பிரகாஷ் இயக்கத்தில் கர்ணா படத்தில் சூர்யா நடிக்கவுள்ளார். மகாபாரத கதைக்களத்தில் உருவாகவுள்ள இந்தப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகை ஜான்வி கபூரும் இணைந்துள்ளார். படத்தில் அவர் திரௌபதி கேரக்டரில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் ப்ரீ புரொடக்ஷன் வேலைகள் தற்போது ஏறக்குறைய நிறைவு கட்டத்தை எட்டியுள்ளதால் விரைவில் படத்தின் சூட்டிங் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே சூர்யா -வெற்றிமாறன் கூட்டணியில் முன்னதாக அறிவிக்கப்பட்ட வாடிவாசல் படம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.

சூர்யாவின் பிளான்: தற்போது விடுதலை 2 படத்தை இயக்கிவரும் வெற்றிமாறன், விரைவில் அந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு, வாடிவாசல் படத்தின் வேலைகளில் இறங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்போது புறநானூறு படத்தில் நடிக்கவுள்ள சூர்யா, ஒரே நேரத்தில் கர்ணா மற்றும் வாடிவாசல் படங்களில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டு படங்களின் சூட்டிங்கும் இந்த ஆண்டிலேயே துவங்கவுள்ளதாகவும் சூர்யாவின் கேரியரில் இரு படங்களுமே பிரம்மாண்டமாக மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X