Actor Suriya: சூர்யாவிற்கு ஜோடியாகும் ஜான்வி கபூர்.. புராண கதையில் களமிறங்கும் கங்குவா நாயகன்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. வரலாற்றுப் பின்னணியில் எடுக்கப்பட்ட இந்தப் படத்தினை இயக்குநர் சிவா டைரக்ட் செய்துள்ளார். இந்தப் படத்தின் சூட்டிங் சென்னை, கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கங்குவா படத்தின் புதிய போஸ்டரை பொங்கல் பண்டிகையையொட்டி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூர்யா -சுதா கொங்கரா காம்பினேஷனில் இரண்டாவதாக உருவாகவுள்ள இந்தப் படத்திற்கு தற்காலிகமாக புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் சூட்டிங் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ள நிலையில், படத்தில் கல்லூரி மாணவராக களமிறங்கவுள்ள சூர்யா, அதற்காக சில பிட்னஸ் முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அதனால் அவர் சில தினங்கள் கழித்தே படத்தின் சூட்டிங்கில் இணைவார் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து வெற்றிமாறனின் வாடிவாசல் மற்றும் பாலிவுட்டில் கர்ணன் ஆகிய படங்களில் சூர்யா அடுத்தடுத்து நடிக்கவுள்ளார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் நடிப்பில் அடுத்தடுத்த வெற்றிப் படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. தற்போது இயக்குநர் சிவா டைரக்ஷனில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ள நிலையில் சில பேட்ச் வேலைகளை தற்போது படக்குழுவினர் மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, கோவா, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் இந்தப் படத்தின் சூட்டிங் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக திஷா பதானியும் வில்லனாக பாபி தியோலும் நடித்துள்ளனர்.
புறநானூறு படத்தில் சூர்யா: இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கராவுடன் புறநானூறு படத்திற்காக இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் அவருடன் துல்கர் சல்மான், நஸ்ரியா, அதிதி ஷங்கர் ஆகியோர் இணைந்துள்ளனர். படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ள நிலையில், துல்கர் உள்ளிட்டவர்களின் போர்ஷன்களை முதலில் சுதா கொங்கரா இயக்கவுள்ளார். இந்தப் படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ள நிலையில், அதற்காக தன்னுடைய பிட்னசை சிறப்பாக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளதாகவும் அதற்காக மும்பையில் சில தினங்கள் அவர் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் அதனால் இந்தப் படத்தின் சூட்டிங் சில தினங்கள் கழித்தே அவர் பங்கேற்பார் என்றும் கூறப்பட்டுள்ளது.
பாலிவுட்டில் என்ட்ரி: இந்தப் படத்தை தொடர்ந்தே வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் சூர்யா இணையவுள்ளார். முன்னதாகவே அறிவிக்கப்பட்ட இந்தப் படத்தின் சூட்டிங் வெற்றிமாறனின் விடுதலை, விடுதலை 2 படங்களால் தாமதமாகியுள்ளது. இந்நிலையில் சுதா கொங்கரா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு வெற்றிமாறனுடன் சூர்யா கைகோர்க்கவுள்ளார். இந்தப் படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் டெஸ்ட் சூட் முதலியவை நடத்தப்பட்ட நிலையில், இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே அதிகமாக எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதற்கேற்ப ஜல்லிக்கட்டை மையமாக கொண்டு இந்தப் படத்தின் கதைக்களம் உருவாகவுள்ளது.
கர்ணன் படத்தில் சூர்யா: இந்தப் படத்தின் இடையில் பாலிவுட்டில் ராகேஷ் ஓம் பிரகாஷ் மெஹ்ரா இயக்கத்தில் மகாபாரத கர்ணன் குறித்த கதையில் நடிக்கவும் சூர்யா கமிட்டாகியுள்ளார். கர்ணனின் வாழ்க்கையை சொல்லும் படமாக இந்தப் படம் உருவாகவுள்ள நிலையில், படத்தில் கர்ணனாக சூர்யா நடிக்கவுள்ளதாக இயக்குநர் சமீபத்திய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் ரசிகர்களுக்கு விஷுவல் ட்ரீட்டாக அமையும் என்றும் அதிகமான சிஜி வேலைகள் கொண்டதாக இந்தப் படம் உருவாகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாகவுள்ளது.
சூர்யா ஜோடியாகும் ஜான்வி கபூர்?: இதனிடையே இந்தப் படத்தில் சூர்யாவின் ஜோடியாக மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீப காலங்களில் அதிகமான வரலாற்று மற்றும் அதிகாச கதைகள் திரைப்படங்களாக உருவாகி வருகின்றன. இவை ரசிகர்களுக்கு அதிகப்படியான விஷுவல் ட்ரீட்டாகவும் அமைந்து வருகின்றன. இந்நிலையில் சூர்யாவின் கங்குவா படமும் வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் சூழலில் அவர் கர்ணனின் வாழ்க்கையை சொல்லும் இதிகாச கதையில் இணையவுள்ளது மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











