‘கருப்பு‘ படம் நல்லா ஓடணும் ஆத்தா.. குலதெய்வ கோயில் சூர்யா வழிபாடு!
சென்னை: நடிகர் சூர்யா கோவை அன்னூர் அருகே உள்ள தனது குலதெய்வமான மதுர காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்திற்கு பிறகு முதல் முறையாக குலதெய்வ கோயிலுக்கு வந்த சூர்யா, அங்கு நடைபெற்ற அபிஷேக பூஜைகளில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு செய்தார்.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான திரைப்படம் கங்குவா இந்த படம் நிச்சயம் 2 ஆயிரம் கோடியை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் வெளியான முதல் நாளே படத்திற்கு வந்த தொடர் நெகட்டிவ் விமர்சனங்களில் படம் வெளியான இரண்டு நாட்களிலேயே வாஷ் அவுட்டாகி விட்டது. அந்த படத்தை தொடர்ந்து ரெட்ரோ படம் வெளியாகி ஒரளவிற்கு வசூலை அள்ளியது. தற்போது சூர்யாவின் நடிப்பில் 'கருப்பு' படம் மீது ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பாப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யாவின் கருப்பு: மே 14ஆம் கருப்பு படம் வெளியாக இருக்கும் நிலையில் சூர்யா கோவை அன்னூர் அருகே உள்ள தனது குலதெய்வமான மதுர காளியம்மன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். கும்பாபிஷேகத்திற்கு பிறகு முதல் முறையாக குலதெய்வ கோயிலுக்கு வந்த சூர்யா, கருப்பு படம் வெற்றி அடைய மனமுருகி வேண்டிக்கொண்டார். சூர்யாவின் 45வது திரைப்படமான 'கருப்பு' படத்தில் த்ரிஷா கிருஷ்ணன்,ஸ்வாசிகா, அனேகா, மாயா ரவி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படத்தை Dream Warrior Pictures நிறுவனம் தயாரித்துள்ளது. ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
சூர்யாவின் 46வது படம்: கருப்பு திரைப்படத்தை தொடர்ந்து, சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் மமிதா பைஜூ, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். Sithara Entertainments நிறுவனம் தயாரித்திருக்கும் இந்த திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு திரைப்படம் வெளியாக இருக்கும் சூழலில் சூர்யா தனது குலதெய்வ கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்தியது ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. கருப்பு படம் வெற்றி அடைய ரசிகர்கள் இணையத்தில் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications