Actor Suriya: இனிமேல் நோ ரொமான்ஸ்.. கங்குவா நாயகன் எடுத்த அதிரடி முடிவு!

சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்து வித்தியாசமான கதைக்களங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்/ சூர்யா என்றாலே ரொமான்ஸ் என்பது போல அவரது ஆரம்ப காலங்களில் ஜோதிகா உள்ளிட்ட பல நடிகைகளுடன் அவர் நடித்திருந்த படங்கள் மிகச்சிறப்பாக அமைந்தன. இந்நிலையில் தற்போது கங்குவா படத்திற்காக கொடுத்த பேட்டி ஒன்றில் தன்னுடைய ரொமான்ஸ் படங்கள் குறித்து அவர் பேசியுள்ளார்.

தற்போது சூர்யா நடித்துள்ள கங்குவா படத்தில் இருவேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். இதில் பிரான்சிஸ் கேரக்டர் ரொமான்ஸ் காட்சிகளில் அதிகமாக நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூர்யா மற்றும் திஷா பதானி கோவா கடற்கரையில் ஆட்டம் போடும்வகையிலான பாடல் ஒன்றும் வெளியானது. ஆனால் இந்த கெட்டப் மற்றும் பாடல் சூர்யாவிற்கு கலவையான விமர்சனங்களையே பெற்றுக் கொடுத்தது.

actor suriya kanguva movie tamil cinema

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா நடிப்பில் இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது கங்குவா படம். வரலாற்று படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் பிரான்சிஸ் மற்றும் கங்குவன் என இருவேறு கெட்டப்புகளில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளார் சூர்யா. இந்த படத்தின் ஒட்டுமொத்த கதையையும் சூர்யா தன்னுடைய தோள்களில் தாங்குவதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன. படத்தை ரசிகர்கள் திரையரங்குகளில் சென்று கொண்டாடி வருகின்றனர். சூர்யாவின் இரண்டரை வருட உழைப்பிற்கு இந்தப்படம் சிறப்பான வரவேற்பை பெற்றுத் தரும் என்று இயக்குநர் சிவா உள்ளிட்ட படக்குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

இனி நோ ரொமான்ஸ்: இந்த படத்திற்காக அடுத்தடுத்த பிரமோஷன்களில் கடந்த சில வாரங்களாகவே நடிகர் சூர்யா ஈடுபட்டு வந்தார். மிகப்பெரிய அளவில் படத்திற்கான எதிர்பார்ப்பை இந்த பிரமோஷன்கள் படத்திற்கு கொடுத்துள்ளது. நடிகர் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல், இயக்குனர் சிவா மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா என அனைத்து தரப்பினரும் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே எகிற செய்த நிலையில் இன்றைய தினம் படம் சர்வதேச அளவில் ரிலீசாகியுள்ளது. முன்னதாக நடிகர் சூர்யா கொடுத்திருந்த பேட்டியொன்றில் வயதிற்கு தக்க இனிமேல் ரொமான்ஸ் படங்களில் தான் நடிக்க போவதில்லை என்று தெரிவித்துள்ளார்.

ரொம்ப லேட்டாயிடுச்சு: இனிமேல் முழுக்க முழுக்க ஆக்ஷன் படங்களில் மட்டுமே தான் நடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் ரொமான்ஸ் படங்களுக்கு லேட் ஆகிவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். சூர்யா என்றால் அவரது ரொமான்ஸ் படங்கள் மிகச் சிறப்பாக ரசிகர்கள் மத்தியில் நினைவுக்கு வரும். இந்நிலையில் தன்னுடைய வயதுக்கு தக்கபடி இனிமேல் ரொமான்ஸ் படங்களில் நடிக்கப் போவதில்லை என்று சூர்யா கூறியுள்ளது கவனத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில் அவர் அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் ரொமான்ஸ் மற்றும் ஆக்ஷன் கதைக்களத்தில் அவர் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

https://www.instagram.com/p/DCTjJgOJD8h/

அடுத்தடுத்த படங்கள்: இந்தப் படத்தின் டைட்டில் இன்னும் வெளியாகாத நிலையில், கங்குவா படம் தற்போது ரிலீசாகியுள்ள நிலையில் அடுத்தடுத்து அந்தப் படத்தின் அப்டேட்டை எதிர்பார்க்கலாம். இதையடுத்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா 45 படத்திலும் சூர்யா கமிட்டாகியுள்ளார். இந்த படம் கிராமத்து பின்புலத்தில் மிரட்டலான கதைகளத்தில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதையொட்டி முன்னதாக படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகி மாஸ் காட்டியது. இதனிடையே இன்றைய தினம் வெளியாகியுள்ள கங்குவா படம் தற்போது சிறப்பான விமர்சனங்களை பெற்று வருகிறது. சில கலவையான விமர்சனங்களையும் படம் பெற்று வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் இந்த படத்தின் சரியான விமர்சனங்கள் வெளியாகி ரசிகர்களிடையே படத்திற்கான வரவேற்பு குறித்தும் தெரியவரும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X