Actor Suriya: படத்தேர்வுக்கு புதிய யுக்தி.. வேற லெவலில் திட்டமிடும் நடிகர் சூர்யா!
சென்னை: நடிகர் சூர்யா அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் தன்னை ஈடுபடுத்தி வெற்றிப் படங்களை கொடுத்து வருகிறார். தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டிவரும் சூர்யா சூரரை போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் என அடுத்தடுத்த மாஸ் வெற்றிகளை கொடுத்த நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சர்வதேச அளவில் 10 மொழிகளில் இந்தப் படம் ரிலீசாகவுள்ள நிலையில், படத்தில் திஷா பதானி, பாபி தியோல் என பாலிவுட் பிரபலங்கள் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்தை தொடர்ந்து தன்னுடைய நடிப்பு மற்றும் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கத்தில் இணையவுள்ளார் சூர்யா. இந்தப் படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா, விஜய் வர்மா என முன்னணி நடிகர்கள், நடிகைகள் இணைந்துள்ளனர். முன்னதாக சூரரை போற்று படம் மூலம் இணைந்திருந்த சூர்யா -சுதா கொங்கரா கூட்டணி இந்தப் படத்தில் மீண்டும் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் மார்ச் மாதத்தின் 2வது வாரத்தில் துவங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளார். உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு படத்தின் கதைக்களம் உருவாகியுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கதைத்தேர்வு மிகச்சிறப்பான வகையில் அமைந்து வருகிறது. சூரரை போற்று, ஜெய்பீம், விக்ரம், எதற்கும் துணிந்தவன் என அவரது நடிப்பு மற்றும் தயாரிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே வித்தியாசமான ஜானர்களில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து மாஸ் காட்டியது. இந்நிலையில் அடுத்ததாக சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. சர்வதேச அளவில் 10 மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் திஷா பதானி, பாபி தியோல் என முன்னணி பாலிவுட் நடிகர்கள் இணைந்துள்ளனர்.
தயாரிப்பாளர் சூர்யா: தற்போது அக்ஷய் குமார் லீட் கேரக்டரில் நடித்துள்ள சூரரை போற்று படத்தின் இந்தி ரீமேக்கையும் சுதா கொங்குரா இயக்கத்தில் சூர்யா தயாரித்துள்ளார். அவர் இந்தப் படத்தில் கேமியோ கேரக்டரில் நடித்துள்ள நிலையில் படம் மே மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து கார்த்தியின் கார்த்தி 27 படத்தையும் தனது 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனத்திற்காக தயாரித்துள்ளார் கார்த்தி. இந்தப் படத்தின் சூட்டிங்கும் நிறைவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. 96 பட இயக்குநர் பிரேம்குமார் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
சூர்யாவின் கதைத்தேர்வு: சூர்யாவின் கதைத்தேர்வு தனித்தன்மையுடன் காணப்படுகிறது. முன்னதாக கார்த்தியின் அப்பா சிவக்குமார் அவரது கதைகளை இறுதி செய்த நிலையில், தங்கதுரை கதை கேட்டு இறுதி செய்த நிகழ்வுகளும் இருந்தது. தொடர்ந்து தன்னுடைய ஊரிலிருந்து வித்தியாசமான களங்களில் பணியாற்றிவரும் 20 பேரை வரவழைத்து அவர்களிடம் கதை சொல்ல வைத்து அதன்மூலம் தன்னுடைய படங்களின் கதைகளை தேர்வு செய்ததும் நடந்தது. இந்த முயற்சிகள் கைக்கொடுக்காத நிலையில் தற்போது புதிய யுக்தியை கையிலெடுத்துள்ளார் சூர்யா. தற்போது சூர்யாவின் கதைகளை பிரபல எழுத்தாளர் இறுதி செய்து வருகிறார்.
சூர்யாவுடன் இணையும் பிரபல எழுத்தாளர்: பிரபல வார இதழில் தொடர் எழுதிவரும் பிரபல எழுத்தாளரை வைத்து தன்னுடைய படங்களின் கதைகளை இறுதி செய்யும் திட்டத்தை தற்போது சூர்யா மேற்கொண்டுள்ளார். இனிமேல் அவரது கதைகளை அந்த எழுத்தாளர்தான் இறுதி செய்வார் என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து சூர்யாவின் படங்கள் இனிமேல், குறைந்த பட்ட உத்தரவாதத்துடன் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பாலிவுட்டிலும் படங்களில் நடிக்க முற்பட்டுவரும் சூர்யாவிற்கு அந்தப் படங்களின் கதையை யார் இறுதி செய்வார் என்றும் கேள்வி எழுந்துள்ளது. பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications











