மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சூர்யா.. யாரோட டைரக்ஷன்னு பாருங்க!
சென்னை: நடிகர் சூர்யா மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றதாக இயக்குநர் பாண்டிராஜ் தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்துள்ளார்.

அண்மையில் ஜெய்பீம் படம்
இதனை தொடர்ந்து இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெறும் என தெரிகிறது. சூர்யா நடிப்பில் அண்மையில் ஜெய்பீம் படம் வெளியானது டி ஜே ஞானவேல் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருந்தார் சூர்யா.

சிவா இயக்கத்தில் சூர்யா
இருளர் இன மக்கள் போலீஸாரால் சந்திக்கும துயரங்களை சொல்லும் இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா அடுத்ததாக இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார்.

இரட்டை வேடத்தில் சூர்யா
இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மீண்டும் இரட்டை வேடத்தில் சூர்யா
ஏற்கனவே பேரழகன், வாரணம் ஆயிரம், வேல், மாற்றான், மாசு என்கிற மாசிலாமணி, 24 உள்ளிட்ட சில படங்களில் நடிகர் சூர்யா இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அந்த படங்கள் பெரும் வெற்றி பெற்றது. தற்போது மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் சூர்யா.

வசூலை குவிக்கும் அண்ணாத்த படம்
இயக்குநர் சிறுத்தை சிவா, நடிகர் ரஜினிகாந்தை வைத்து இயக்கிய அண்ணாத்த படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. இந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஆதரவை பெற்றது. வசூலையும் குவித்து சாதனை படைத்து வருகிறது.


Click it and Unblock the Notifications











