எதற்கும் துணிந்தவன் இறுதிகட்ட படப்பிடிப்பு எங்க நடக்குது… அப்டேட் கொடுத்த படக்குழு!

சென்னை : சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு குற்றாலத்தில் தொடங்கி உள்ளது.

சூர்யா, பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படம் டிசம்பர் மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எதற்கும் துணிந்தவன்

எதற்கும் துணிந்தவன்

சூரரைப் போற்று பட வெற்றிக்குப் பிறகு நடிகர் சூர்யா, இயக்குநர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து வருகிறார். சூர்யாவுக்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்து வருகிறார். இதில் சத்யராஜ், ப்ரியங்கா மோகன், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, இளவரசு, சுப்பு பஞ்சு, திவ்யா துரைசாமி, ஜெயப்பிரகாஷ், சூரி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

காரைக்குடியில் படப்பிடிப்பு

காரைக்குடியில் படப்பிடிப்பு

இப்படத்தின், முதற்கட்டப் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கிற்கு முன்பு தொடங்கிய நிலையில், சமீபத்தில் அரசு படப்பிடிப்புகளுக்கு அனுமதி அளித்ததால் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 51 நாட்கள் நடைபெற்றது.

வாளுடன் சூர்யா

வாளுடன் சூர்யா

சூர்யாவின் பிறந்த நாள் அன்று இத்திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. அதில், சூர்யா, கையில் வாளுடன் செம மாஸாக இருந்தார். இது வெளியானதில் இருந்தே இப்படம் எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்து இருக்கிறார்கள்.

குற்றாலத்தில்

குற்றாலத்தில்

இந்த நிலையில் தற்போது படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக குற்றாலம் சென்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது இந்த படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு என்று கூறப்படுகிறது. குற்றாலத்தில் ஒரு சில நாட்கள் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற உடன் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெறும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

டிசம்பரில் வெளியிட திட்டம்

டிசம்பரில் வெளியிட திட்டம்

சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் இந்த படத்தை டிசம்பர் மாதம் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதை அடுத்து படக்குழுவினர் சுறுசுறுப்பாக ஒரு பக்கம் படப்பிடிப்பு இன்னொரு பக்கம் போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வாடிவாசல்

வாடிவாசல்

அசுரன், கர்ணன் என இரு தொடர் வெற்றிகளைத் தொடர்ந்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் இயக்க உள்ளார். இதில் சூர்யா நடிக்க உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு எதற்கும் துணிந்தவன் முடிந்த பிறகு தொடங்கும் என்று நம்பப்படுகிறது. அசுரன் திரைப்படத்தை போல, எழுத்தாளர் சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது.

ராகவாலாரன்ஸின் அதிகாரம்

ராகவாலாரன்ஸின் அதிகாரம்

வெற்றிமாறன் தற்போது சூரி, விஜய் சேதுபதி நடிக்கும் விடுதலை படத்தை இயக்கி வருகிறார். ஜெயமோகனின் கதையை தழுவி இந்தப் படம் எடுக்கப்படுகிறது. மேலும், ராகவா லாரன்ஸ் நடிக்கும் அதிகாரம் படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார். இந்த படத்தை இயக்குனர் துரை செந்தில் இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்தை எஸ்.கதிரேசன் மற்றும் வெற்றிமாறன் ஆகியோர் தயாரித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X