நான் அரசியலுக்கு வரணுமா.. சூர்யா நச்சுன்னு பதில்!!

சென்னை: சமீபகாலமாக சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் சமூக அரசியலை ஆணித்தரமாக பேசி வருகிறது

ஜெய்பீம் படத்தில் இருளர்கள் வாழ்க்கையைப் பற்றியும் அவர்களுக்கு குரல் எழுப்பியும் இருந்த சூர்யாவுக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு கொடுத்தனர்

சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி பேசியுள்ள சூர்ய அரசியலுக்கு வருவது குறித்து அதிரடி பதில் கொடுத்துள்ளார்

 அசைக்க முடியாத

அசைக்க முடியாத

சொந்த உழைப்பின் மூலம் இப்பொழுது தமிழ் சினிமாவில் அசைக்க முடியாத நடிப்பின் நாயகனாக உயர்ந்துள்ள சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டைப்போலவே கேரளா மற்றும் ஆந்திராவில் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளமே இருந்து வருகிறது.

ஜெய்பீம்

ஜெய்பீம்

சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியாகி தமிழுக்கு நிகராக அங்கு மிகப்பெரிய வசூல் சாதனைகளை செய்து வருகிறது. சூரரைப் போற்று கொடுத்த மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து ஜெய்பீம் படத்தில் சூர்யா நடித்து இருப்பார்

வக்கீலாக

வக்கீலாக

இருளர்கள் படிப்பு அறிவின்மையால் எவ்வாறெல்லாம் இன்றுவரை அடிமைகளாக நடத்தப்படுகிறார்கள் அதிகாரத்தின் பெயரில் காவல்துறை அதிகாரிகள் எவ்வாறெல்லாம் அவர்கள் மீது அத்துமீறி இருக்கிறார்கள் என்பதை உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்ட ஜெய்பீம் திரைப்படத்தில் சூர்யா சந்துரு என்ற கதாபாத்திரத்தில் வழக்கறிஞராக நடித்திருப்பார். சூர்யா இதுவரை பல வேடங்களை ஏற்று நடித்து இருந்தாலும் முதல் முறையாக ஜெய் பீம் படத்தில் வக்கீலாக நடித்திருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது

 நாட்டையே உலுக்கிய சம்பவம்

நாட்டையே உலுக்கிய சம்பவம்

ஜெய்பீம் திரைப்படம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் இடையே வெளியாகி பெரும்பான்மையான மக்களிடையே ஆதரவைப் பெற்றது. சில எதிர்ப்புகளும் இப்படத்திற்கு வந்தது. ஜெய் பீம் படத்தின் காட்சிகள் ஆஸ்கர் யூடியூப் சேனல்களிலும் அப்லோட் செய்யப்பட்டு சினிமாவிற்கு பெருமை தேடித் தந்துள்ளது . சூரரைப் போற்று, ஜெய்பீம் உள்ளிட்ட படங்களில் சமூக பிரச்சனைகளை பற்றி அழுத்தமாகப் பேசி வரும் சூர்யா சமீபத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படத்திலும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை பற்றி பேசியுள்ளார்.

 அரசியலுக்கு வரணுமா

அரசியலுக்கு வரணுமா

சில வருடங்களுக்கு முன்பு நாட்டையே உலுக்கிய சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை மையப்படுத்தி வெளியான இந்தப் படம் குடும்பங்கள் கொண்டாடும் இந்த ஆடு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியான எதற்கும் துணிந்தவன் பட விழாவில் பத்திரிக்கையாளர்கள் சினிமாவில் அரசியல் பேசும் சூர்யா நிஜத்திலும் அரசியலுக்கு வருவாரா.. உள்ளிட்ட பல கேள்விகளுக்கு சூர்யா அதிரடி பதில்கள் அளித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X