பிரம்மாண்டமாக உருவாகும் சூர்யாவின் சூப்பர் ஹிட் படத்தின் 2ம் பாகம் !

சென்னை : தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து இப்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ளவர் நடிகர் சூர்யா

சூர்யாவின் நடிப்பில் விக்ரம் குமார் இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் 24 டைம் டிராவலிங்கை மையப்படுத்தி வெளியானது

தமிழ் ரசிகர்களுக்கு முற்றிலும் புதுமையான கதை களத்தில் வெளியான 24 படத்தின் இரண்டாம் பாகத்தின் பணிகள் மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது

 ஆஸ்கர் விருதுகளை

ஆஸ்கர் விருதுகளை

சமூகத்திற்கு தேவையான பல நல்ல கருத்துகளை தனது ஒவ்வொரு படங்களிலும் செய்து வருகிறார் நடிகர் சூர்யா. அந்த வகையில் கடைசியாக வெளியான ஜெய்பீம் திரைப்படம் ஆஸ்கர் விருது வரை சென்றது. அதற்கு முன்பு வெளியான சூரரைப் போற்று திரைப்படமும் ஆஸ்கர் விருதுகளை தட்டியது. இவ்வாறு சவாலான கதாபாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள சூர்யாவின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் வித்தியாசமான கதைக்களத்தில் வெளியாகி மாற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்து வருகிறது . குறிப்பாக தமிழைப் போலவே தெலுங்கிலும் சூர்யாவுக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளனர்.

சயின்ஸ் ஃபிக்ஷனை மையப்படுத்தி

சயின்ஸ் ஃபிக்ஷனை மையப்படுத்தி

டைம் டிராவலிங்கை மையப்படுத்தி தமிழில் வெளியான திரைப்படங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் சூர்யாவின் நடிப்பில் வெளியான 24 திரைப்படம் டைம் ட்ராவலிங்கை மையப்படுத்தி வெளியானது. கடந்த 2016ம் ஆண்டு வெளியான 24 படத்தை இயக்குனர் விக்ரம் குமார் இயக்கி இருந்தார். டைம் டிராவல் மற்றும் சயின்ஸ் ஃபிக்ஷனை மையப்படுத்தி வெளியான 24ல் சூர்யா மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து கலக்கியிருப்பார்.

 வில்லன் கதாபாத்திரம்

வில்லன் கதாபாத்திரம்

ஹீரோ மற்றும் வில்லன் என இரண்டிலும் ஒரே படத்தில் கலக்கிய சூர்யாவின் நடிப்பு அனைவரையும் பிரமிக்க வைத்தது. மேலும் இந்த படம் சிறந்த ஒளிப்பதிவிற்காக தேசிய விருதையும் வென்றது. நித்யா மேனன் மற்றும் சமந்தா என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்திருந்தனர்.

சூர்யா மூன்று வேடங்களில் நடித்திருந்தாலும் குறிப்பாக ஆத்ரேயா என்ற வில்லன் கதாபாத்திரம் இன்றளவும் ரசிகர்களின் ஃபேவரைட்டாக உள்ளது.

 24 இரண்டாவது பாகம்

24 இரண்டாவது பாகம்

24 வெளியானபோது கலவையான விமர்சனங்களை பெற்றாலும் தமிழ் சினிமாவில் இது அசாத்திய முயற்சி என்றே சொல்லலாம். அனைவரிடத்திலும் நல்ல வரவேற்பு பெற்ற 24 படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்குவதில் சூர்யா தீவிர முயற்சியில் உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சூர்யா இப்பொழுது பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் மற்றும் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதை தொடர்ந்து 24 பாகம் 2ல் நடிக்க உள்ளார் . மேலும் இந்த படம் முதல் பாகத்தை விடவும் மிக பிரம்மாண்டமாக உருவாக உள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X