மகளிடமிருந்து திடீரென வந்த மெசேஜ்.. தூங்காமல் அழுத சூர்யா!
சென்னை: நடிகர் சூர்யா தனது குடும்பத்தின் மீது அதிக பாசம் கொண்டவர் என்பதை பல மேடைகளில் வெளிப்படுத்தி இருக்கிறார். குறிப்பாக அவர் எந்த மேடையில் பேசினாலும், தனது மனைவி ஜோதிகா பற்றி அவர் பேச தவறியதே இல்லை. அந்த அளவிற்கு மனைவி, குழந்தைகள் மீது பாசம் கொண்ட சூர்யா தனது மகளிடம் இருந்து வந்த மெசேஜை பார்த்துவிட்டு கதறி அழுததாக பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.
மார்கண்டேயனாக இருக்கும் மூத்த நடிகர் சிவக்குமாரின் மூத்த மகனான சூர்யா, நேருக்கு நேர் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகம் ஆனார். அந்த படத்தை தொடர்ந்து ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்த சூர்யா, ஜோதிகாவுடன் பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தில் நடித்தார். முதல் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்த போதே இருவருக்கும் இடையே காதல் மலர 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு தியா என்கிற மகளும், தேவ் என்கிற மகனும் உள்ளனர். திருமணத்திற்கு பின் சினிமாவை விட்டு விலகி இருந்த ஜோதிகா தற்போது தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறார். பிள்ளைகளின் படிப்புக்காக சூர்யா தன்னுடைய குடும்பத்தோடு மும்பையில் செட்டிலாகிவிட்டதாக சொல்லப்பட்டாலும், ஜோதிகா தான், அடுத்தடுத்து பாலிவுட் படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். அண்மையில் ஜோதிகா டப்பா காட்ரில் என்கிற வெப் தொடரில் நடித்திருந்தார். இந்த தொடர் பலரை கவரும் வகையில் இருந்தது.

ரெட்ரோ: நடிகர் சூர்யா நடித்த ரெட்ரோ திரைப்படம் மே 1ந் தேதி தியேட்டரில் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இந்த படத்தில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், நாசர் என பலர் நடித்துள்ளனர். இந்த படத்தில் சூர்யா வழக்கத்திற்கும் மாறாக அதிரடி ஆக்ஷன் காட்சிகளில் கலக்கி உள்ளார். படத்தை பார்த்த பலர் சூர்யாவின் நடிப்பை பாராட்டி வருகின்றனர். தொடர் தோல்வி படத்தால் துவண்டு இருந்த சூர்யாவை கார்த்திக் சுப்புராஜ் தூக்கி நிறுத்திவிட்டார் என சூர்யாவின் ரசிகர்கள் அவருக்கு இணையத்தில் நன்றி தெரிவித்து வருகின்றனர்.
திடீரென வந்த மெசேஜ்: ரெட்ரோ படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய சூர்யா, நான் சோகமாக இருக்கும் போதும், மகிழ்ச்சியாக இருக்கும் போதும் பாடல்களை கேட்பேன். ஆனால், சமீபகாலமாக என் மனதிற்கு பிடித்த பாடலாக சித்தா படத்தில் இடம்பெற்ற "என் பார்வை உன்னோடு" பாடல் இருக்கிறது. இதற்கு காரணம் என் மகள் தியா மேற்படிப்புக்காக அமெரிக்கா செல்ல இருப்பதால், இந்த பாடலை நான் அதிகமாக கேட்கிறேன். அப்படித்தான் ரெட்ரோ படப்பிடிப்பின்போது நள்ளிரவு 3 மணியளவில் அந்த பாடலை கேட்டுக் கொண்டிருந்தேன், அந்த நேரம் என் மகள் தியாவிடம் இருந்து எனக்கு ஒரு மெசேஜ் வந்தது, மகளை நினைத்து பாடல் கேட்டுக்கொண்டிருக்கும் போது மகளிடம் இருந்து திடீரென வந்த மெசேஜால் எமோஷனலாகி நீண்ட நேரம் தூங்காமல் அழுதுக்கொண்டே இருந்தேன். இதை, இந்த இடத்தில் சொல்வதற்கு காரணம், பாடல்கள் நம் வாழ்க்கையுடன் நினைவுகளாக நீடிக்ககூடியது என சூர்யா அந்த பேட்டியில் கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications











