பாலிவுட்டுக்கு நிருபிப்பதற்காக வேலை செய்யவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை... சூர்யா நெத்தியடி!

கொச்சி : திறமையை நிரூபிக்க பாலிவுட்டிற்கு செல்லவேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை என்று நடிகர் சூர்யா பேசியுள்ளார்.

Recommended Video

Etharkkum Thunindhavan Audience Opinion | Suriya | Pandiraj | D Imman | Tamil Filmibeat

பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சூர்யா நடித்துள்ள படம் எதற்கும் துணிந்தவன். ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன், வினய் ராய், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் உருவாகி உள்ள, இத்திரைப்படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.

அவசியம் இல்லை

அவசியம் இல்லை

எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தின் மலையாள வெர்ஷனுக்கான ப்ரோமோஷன் நிகழ்ச்சி கொச்சியில் நேற்று நடைபெற்றது. அப்போது செய்தியாளர் ஒருவர், பாலிவுட்டில் பணியாற்ற விரும்புகிறீர்களா? என்று கேட்டார். இதற்கு பதிலளித்த சூர்யா, தென்னிந்திய நடிகர்கள் தங்களது திறமையை நிரூபிக்க பாலிவுட்டிற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

பாலிவுட்டை பேச வைப்போம்

பாலிவுட்டை பேச வைப்போம்

தொடர்ந்து பேசிய சூர்யா, பாலிவுட் எங்களைப் பற்றி பேச வைப்போம் என்றும் வாய்ப்பு கிடைத்தால் பாலிவுட்டிற்கு செல்வேன், ஆனால், நம்மை நிரூபிப்பதற்காக நாம் அங்கு செல்ல வேண்டும் என்று நான் நினைக்கவில்லை என்றார்.

மலையாள படத்தில் நடிக்க ஆசை

மலையாள படத்தில் நடிக்க ஆசை

மலையாளப் படத்தில் நடிப்பீர்களா என்ற கேள்விக்கு பதிலளித்த சூர்யா, மலையாள மொழியில் எனக்கு சில தடைகள் இருக்கிறது அதை முதலில் நான் உடைக்க வேண்டும். ஆனால் மலையாளத்தில் ஒரு படமாவது நடிக்க வேண்டும் என்பது எனது ஆசையாக உள்ளது என்றார்.

இப்படம் ஒரு பாடம்

இப்படம் ஒரு பாடம்

எதற்கும் துணிந்தவன் திரைப்படம் ஒரு சாதாரணக் குடும்பத்தில் நடக்கக்கூடிய ஒரு பிரச்சினையை பேசும் படமாகும். ஒரு குடும்பத்தில் உள்ள பெண்களுக்கு பிரச்சனை ஏற்படும் போது, தலையெழுத்தென்று இருக்காமல் அந்த சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என்பதை அனைவருக்கும் உணர்ந்தும் பாடமாக எதற்கும் துணிந்தவன் படம் இருக்கும் என்றார் சூர்யா.

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சி சம்பவம்

பொள்ளாச்சியில் பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்தை தமிழக மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அந்த சம்பவத்தை மையமாக வைத்து தான் எதற்கும் துணிந்தவன் படம் உருவாகி உள்ளது. பெண்களை ஏமாற்றி அவர்களை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி, அதனை வீடியோ எடுத்து மிரட்டும் கும்பலிடமிருந்து அவர்களை எப்படி சூர்யா காப்பாற்றுகிறார் என்பதுதான் எதற்கும் துணிந்தவன் படத்தின் கதையாகும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X