தைரியமா இருங்க.. ஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்றேன்.. மாணவ மாணவிகளுக்கு சூர்யா உருக்கமான வேண்டுகோள்!
சென்னை: மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரும் நிலையில் ஒரு அண்ணனாக வேண்டுகோள் விடுத்து உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகர் சூர்யா.
Recommended Video
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் சூர்யா. மூத்த நடிகர் சிவகுமாரின் மகனான சூர்யா, சக நடிகையான ஜோதிகாவை காதலித்து திருமணம் செய்தார்.
திருமணத்திற்கு பிறகு சில காலம் நடிக்காமல் இருந்த ஜோதிகா, பின்னர் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் பாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

விவசாயிகளுக்கு உதவி
சூர்யாவின் தம்பி நடிகர் கார்த்தியும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார். நடிகர் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் நடிப்பதை தாண்டியும் விவசாயிகளுக்கு உதவிகளை செய்வது, அவர்களின் கடன்களை அடைப்பது என சமூகம் சார்ந்த நலப்பணிகளை செய்து வருகின்றனர்.

அகரம் அறக்கட்டளை மூலம் உதவி
அதோடு தாங்கள் நடத்தி வரும் அகரம் அறக்கட்டளையின் மூலம், படிக்க வசதியில்லாத ஏழை எளிய மாணவ மாணவிகளை படிக்க வைத்து வருகின்றனர். அகரம் அறக்கட்டளையின் மூலம் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயன் அடைந்து வருகின்றனர்.

புதியக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு
நடிகர் சூர்யா புதியக் கல்வி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் பேசியிருந்தார். மேலும் நீட் தேர்வுக்கும் எதிர்ப்பு தெரிவித்த நடிகர் சூர்யா சமமான கல்வியை வழங்காமல் எப்படி ஒரே நுழைவுத் தேர்வு என்ற ஆணித்தரமான கேள்வியையும் முன் வைத்தார்.

சூர்யாவுக்கு எதிர்ப்பு
நடிகர் சூர்யாவின் இந்த பேச்சுக்கு ஆதரவு எழுந்த போதும் அவரது பேச்சுக்கு பாஜக தரப்பில் எதிர்ப்பு எழுந்தது. இதனால் புதிய கல்விக் கொள்கைக்கு எதிரான சூர்யாவின் பேச்சு சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நீட் தேர்வு அச்சத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வரும் நிலையில் நடிகர் சூர்யா உருக்கமான வேண்டுகோளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அண்ணனா வேண்டி கேட்டுக்றேன்
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் பாரதியாரின் அச்சமில்லை அச்சமில்லை உச்சி மீது வான் இடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே என்ற கவிதையை கூறியுள்ளார். மேலும் மாணவ மாணவிகள் அனைவரும் அச்சமில்லாமல் இருக்க வேண்டும், நம்பிக்கையுடன் இருக்க வேண்டும் என ஒரு அண்ணனா வேண்டி கேட்டுக்றேன்.

உயிரை விட பெருசு இல்ல
ஒரு பரீட்சை உங்க உயிரைவிட பெருசு இல்ல.. மனசு கஷ்டமா இருந்தா, உங்களுக்கு பிடித்தவங்க... நண்பர்கள், ஆசிரியர்கள் யார்கிட்டையாவது மனசை விட்டு பேசுங்க... பயம், விரக்தி, கவலை வேதனை.. இது எல்லாம் கொஞ்ச நேரத்துல மறைந்துவிடும். தற்கொலை செய்வது.. வாழ்க்கையை முடிச்சுக்கிறேன்னு முடிவு பண்றதெல்லாம் உங்களை பிடித்தவர்களுக்கு மற்றும் அப்பா, அம்மாவுக்கு வாழ்நாள் தண்டனை... மறந்துடாதீங்க..

கேவலமா மார்க் வாங்கியிருக்கேன்
நான் நிறைய தேர்வுகளில் தோற்றிருக்கிறேன். ரொம்ப ரொம்ப கேவலமாக மார்க் வாங்கியிருக்கேன்.
மதிப்பெண், தேர்வு மட்டுமே வாழ்க்கை இல்ல. இதையெல்லாம் விட சாதிக்க நிறைய விஷயங்கள் இருக்கிறது. நம்பிக்கையோடு தைரியமாக இருந்தால் வாழ்க்கையில் அனைவரும் ஜெயிக்கலாம். பெரிதாக ஜெயிக்கலாம்.. அச்சமில்லை அச்சமில்லை.. அச்சமென்பதில்லையே.. இவ்வாறு நடிகர் சூர்யா தனது வீடியோவில் உருக்கமாக பேசியுள்ளார்.


Click it and Unblock the Notifications











