எதற்கும் துணிந்தவன் டப்பிங் பணிகளை துவங்கிய சூர்யா!
சென்னை : நடிகர் சூர்யா இப்பொழுது இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் என்ற படத்தில் நடித்து வருகிறார்
நீண்ட இடைவெளிக்குப் பிறகு முற்றிலும் கிராமத்து கதையில் நடிக்கும் சூர்யாவுக்கு ஜோடியாக டாக்டர் பட நாயகி பிரியங்கா அருள்மோகன் நடிக்கிறார்.
ஜெய்பீம் படத்தினால் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வரும் சூர்யா அதற்கு மத்தியிலும் இப்பொழுது எதற்கும் துணிந்தவன் பட டப்பிங்கை துவங்கியுள்ளார்.

உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட
நடிகர் சூர்யாவின் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படங்களும் தனி கவனத்தை பெற்று வருகிறது அந்த வகையில் சூரரைப்போற்று பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ஜெய்பீம் திரைப்படமும் அனைத்து தரப்பு மக்ககளிடமும் பாராட்டுகளை பெற்று வருகிறது உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்ட இந்த திரைப்படம் பல்வேறு விருதுகளை வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது

நீண்ட இடைவெளிக்கு பிறகு முற்றிலும் கிராமத்து கதையில்
இப்படி ஒருபுறம் ஜெய்பீம் திரைப்படத்திற்கு பாராட்டும் ஆதரவும் குவிந்து வர மற்றொருபுறம் சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. இதற்கு மத்தியிலும் படங்களில் நடித்துவரும் சூர்யா இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்து முடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பிறகு முற்றிலும் கிராமத்து கதை களத்தில் சூர்யா இந்தப் படத்தில் நடித்திருக்க டாக்டர் பட கதாநாயகி பிரியங்கா அருள்மோகன் இப்படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்துள்ளார்

பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை பற்றி
மேலும் சூரி,சரண்யா பொன்வண்ணன், சத்தியராஜ்,தேவதர்ஷினி, தங்கதுரை, இளவரசி உள்ளிட்ட மிகப் பெரிய பட்டாளமே இப்படத்தில் நடிக்க பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமையை பற்றிய திரைப் படமாக இப்படம் உருவாகி உள்ளது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க டி இமான் இசை அமைக்கிறார். சூர்யா,டி இமான் கூட்டணியில் உருவாகும் முதல் படம் இதுவே ஆகும்
Recommended Video

எதற்கும் துணிந்தவன் டப்பிங் பணிகளை துவங்கினார்
ஜெய் பீம் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகி இருந்தாலும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று இந்திய அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இவ்வாறு ஒருபுறம் இப்படத்திற்கு மிகப்பெரிய பாராட்டுகளும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தாலும் மற்றொருபுறம் சில எதிர்ப்புகளும் கிளம்பி வருகிறது. அதையெல்லாம் பொருட்படுத்தாது சூர்யா இப்பொழுது எதற்கும் துணிந்தவன் படத்தின் டப்பிங் பணிகளை துவங்கி உள்ளார் என தெரியவந்துள்ளது. வரும் பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











