'நடிகர்' சூர்யாவுக்கு வயசு 17: கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: சூர்யா நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டது.
விஜய் நடித்த நேருக்கு நேர் படத்தில் சிம்ரன் ஜோடியாக அறிமுகமானார் சூர்யா. படத்தில் பாடல்களை ஓடி ஓடி ஓட்டினார். அதன் பிறகு நடிப்பிலும் சரி, டான்ஸிலும் சரி சூர்யா ரொம்பவே தேறிவிட்டார்.
நேருக்கு நேர் படம் 1997ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 6ம் தேதி ரிலீஸானது.

17 ஆண்டுகள்
நேருக்கு நேரை அடுத்து பல படங்களில் நடித்துள்ள சூர்யா நடிக்க வந்து 17 ஆண்டுகள் ஆகிவிட்டன.

நந்தா
சூர்யாவுக்கு பெயர் வாங்கிக் கொடுத்த படம் 2001ம் ஆண்டில் ரிலீஸான பாலா. அந்த படத்திற்காக அவருக்கு தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

காக்க காக்க
கௌதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடித்த காக்க காக்க அவருக்கு பெயரும், புகழும் வாங்கிக் கொடுத்த படம்.

கஜினி
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடித்த கஜினி அவரது புகழை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது.

சிங்கம்
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம், சிங்கம் 2 ஆகிய இரண்டு படங்களுமே சூப்பர் ஹிட்டாகின. இந்த படத்தால் அவருக்கு பெயரே சிங்கம் என்று ஆகிவிட்டது.

மாஸ்
சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications