Actor Suriya:வேலை நடந்துக்கிட்டு இருக்கு.. ரோலக்ஸ் படத்தின் அப்டேட் சொன்ன சூர்யா!
மும்பை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்த படம் விக்ரம்/ லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்தப்படம் இன்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது. படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். படத்தில் நடிகர் சூர்யா ரோலக்ஸ் என்ற கேரக்டரில் அதிரடி சரவெடியாக நடித்திருந்தார். இந்த படத்தின் வெற்றிக்கு அவரது இந்த கேரக்டரும் மிகப்பெரிய பலத்தை சேர்த்தது. படத்தில் ரோலக்ஸ் கேரக்டரை இறுதிவரை சஸ்பென்சாக வைத்திருந்தது படக்குழு. க்ளைமாக்சில் சில நிமிடங்களே வந்த இந்த கேரக்டர் படத்திற்கு ஒரு புதிய வடிவத்தை கொடுத்திருந்தது.
தொடர்ந்து இந்த படத்தின் மிரட்டலான ரோலக்ஸ் கேரக்டர் விக்ரம் 2 படத்திலும் வருமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இது உறுதிப்படுத்தப்படாத நிலையில் ரோலக்ஸ் என்ற கேரக்டரை தனியாக வைத்து படம் இயக்க உள்ளதாக முன்னதாக பேட்டி ஒன்றில் படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்திருந்தார். மேலும் சூர்யாவுடன் இணைந்து இரும்புக்கை மாயாவி என்ற படத்தையும் இயக்க உள்ளதாக அவர் கூறியிருந்தார். சூர்யாவின் ரோலக்ஸ் கேரக்டர் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ரோலக்ஸ் படத்திற்கும் அதிகமான எதிர்பார்ப்பு உண்டாகியுள்ளது, இந்த படம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்து சிறப்பான கதைக்களங்களில் நடித்து ஏராளமான ரசிகர்களுக்கு சொந்தக்காரராக மாறியுள்ளார். பான் இந்தியா ஸ்டாராகவும் இருந்து வரும் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் ரசிகர்களுக்கு விருந்தாக மாறியுள்ளது. சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்க்கும் துணிந்தவன் படங்களை தொடர்ந்து கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் அதிரடியான ரோலக்ஸ் கேரக்டரில் நடித்திருந்தார் சூர்யா. க்ளைமாக்சில் சில நிமிடங்களே வரும் இந்த கேரக்டர் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய உறுதுணையாக அமைந்தது. மிகப்பெரிய தாக்கத்தை ரசிகர்களிடையே ஏற்படுத்தியது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ்: தற்போது ரஜினியுடன் இணைந்து தான் இயக்கவுள்ள தலைவர் 171 படத்தின் வேலைகளில் ஈடுபட்டுள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படத்தை தொடர்ந்து கைதி 2 மற்றும் விக்ரம் 2 படங்களையும் அவர் அடுத்தடுத்து இயக்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் சூர்யாவுடன் ரோலக்ஸ் மற்றும் இரும்புக்கை மாயாவி படங்களிலும் இணைந்து அவர் அடுத்தடுத்து பணியாற்ற உள்ளதாக முன்னதாக பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இதில் விக்ரம் படத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய ரோலெக்ஸ் படத்தை தனியாக அவர் இயக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ரோலக்ஸ் குறித்து சூர்யா: இந்தப்படம் அறிவிப்பிற்கு முன்பு முன்பே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ள நிலையில் படம் மிகச் சிறப்பான வடிவத்துடன் வெளியாகி ரசிகர்களை கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இன்றைய தினம் கங்குவா படத்தின் டீசரை மும்பையில் ப்ரைம் இந்தியா விழாவில் நடிகர் சூர்யா உள்ளிட்ட படக்குழுவினர் வெளியிட்டனர். மும்பையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாபி தியோல், படத்தின் இயக்குனர் சிவா உள்ளிட்டவர்கள் கலந்துக் கொண்டனர். நிகழ்ச்சியை தொகுத்த வருண் தவான் அவரது ரோலக்ஸ் படம் குறித்து கேள்வி எழுப்பினார். அப்போது படத்தின் வேலைகள் நடந்து வருவதாக சூர்யா உற்சாகத்துடன் பகிர்ந்திருந்தார்.
சிவாவை பாராட்டிய சூர்யா: மேடையில் பல விஷயங்களை பகிர்ந்து கொண்ட சூர்யா, கங்குவா படத்தின் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டார். ஒவ்வொரு படமும் ஸ்கிரிப்ட் சொல்லும் போது ஒரு விதமாகவும் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் அதன் எனர்ஜி சிறிதளவு குறையும் என்றும் தெரிவித்த சூர்யா, ஆனால் கங்குவா படத்தின் எனர்ஜி ஒவ்வொரு நாளும் அதிகரித்தது என்று குறிப்பிட்டார். இந்த படம் கண்டிப்பாக ரசிகர்களை கவரும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு காரணமான இயக்குனர் தயாரிப்பாளர் மற்றும் பாபித்தியோள் உள்ளிட்டவர்களுக்கு தனது நன்றியை பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











