Actor Suriya: கங்குவா படத்தை பார்த்த நடிகர் சூர்யா.. என்ன சொல்லியிருக்காரு தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யா தனது அடுத்தடுத்த மிரட்டலான படங்களை கொடுத்து ரசிகர்களின் கொண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகிறார். விக்ரம் படத்தில் அவர் ஏற்றிருந்த ரோலக்ஸ் கேரக்டர் இன்னும் மக்களின் மனதில் நீங்காமல் இடம்பெற்றுள்ளது. இந்த படத்தின் ரோலக்ஸ் கேரக்டரை மையமாக வைத்து அடுத்ததாக படம் வெளியாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. இந்த படத்திற்காக ரசிகர்கள் வெயிட்டிங். தற்போது தலைவர் 171 படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கைதி 2 படத்தை இயக்க உள்ளதாக கூறியுள்ளார். இந்த படங்களை தொடர்ந்து ரோலக்ஸ் படம் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் சூர்யா நடித்து முடித்துள்ளார். வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ஒரே நேரத்தில் ரிலீசாகவுள்ளது. மிகுந்த பொருட்செலவில் மிகவும் பிரம்மாண்டமாக இந்தப் படம் உருவாகியுள்ளது. படத்தில் சூர்யாவுடன் திஷா பதானி, பாபி தியோல் ஆகியோர் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தை தொடர்ந்து அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் சூர்யா இணையவுள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் இந்தப் படத்தில் இணைந்துள்ள நிலையில், படத்தில் கல்லூரி மாணவராக சூர்யா நடிக்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா அடுத்தடுத்து தேர்ந்தெடுத்த கதைக்களங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் சிறப்பான படங்களை தேர்ந்தெடுத்து ரசிகர்களின் நாடித்துடிப்பை உணர்ந்து கொடுத்து வருகிறார். அந்த வகையில் முன்னதாக சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தன. இதனிடையே தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா.
10 மொழிகளில் ரிலீஸ்: இந்த படத்தின் போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் தற்போது நடந்துவரும் சூழலில் படம் ஆகஸ்ட் மாதத்தில் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாக உள்ளதாக பட குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இதற்கான வேலைகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே அடுத்ததாக சுதா கொங்குரா இயக்கத்தில் புறநானூறு படத்தில் இணைய உள்ளார் சூர்யா. இந்த மாத இறுதியில் இந்த படத்தின் சூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து பாலிவுட்டில் கர்ணா படத்திலும் வெற்றிமாறனின் வாடிவாசல் படத்திலும் அடுத்தடுத்து சூர்யா இணைய உள்ளார்.
வரலாற்று பின்னணி: வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ளது. கங்குவா படம். இந்த படத்தின் சூட்டிங் கடந்த ஆண்டு துவங்கப்பட்டு தற்போது முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு ஜோடி ஆகியுள்ளார் பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி. மேலும் வில்லனாக பாபி தியோல் நடித்துள்ளார். இவர்கள் அனைவரின் போர்ஷன்களும் நிறைவடைந்துள்ள நிலையில் படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன்ஸ் தற்பொழுது முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்த படத்தில் பத்து விதமான கெட்டப்புகளில் சூர்யா நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக படத்தின் போஸ்டர்கள் வீடியோக்கள் ஆகியவை வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிக அளவில் தூண்டியுள்ளது.
உற்சாகத்தில் சூர்யா: இதனிடையே இந்த படத்தின் முழு அவுட்புட்டையும் நடிகர் சூர்யா பார்த்துள்ளதாகவும் படம் குறித்து அவர் மிகுந்த திருப்தி அடைந்துள்ளதாகவும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. படத்தின் ரிலீஸ் ஆகஸ்ட் மாதத்தில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. ஆயினும் மற்ற மொழிகளின் முக்கியமான மற்ற படங்களின் ரிலீஸ் டேட்களையும் பரிசீலித்து விட்டே இந்த ரிலீஸ் தேதி இறுதி செய்யப்படும் என்றும் படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. சர்வதேச அளவில் ரிலீஸ் செய்ய இந்தப்படம் மிகப்பெரிய அளவில் அழுத்தமான மற்றும் பிரம்மாண்டமான திரைக்கதையை கொண்டுள்ளதாகவும் படக்குழுவினர் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











