தியேட்டரில் தெறிக்கவிடும் சிவகார்த்திகேயனின் டாக்டர் படம்.. சூர்யா உட்பட பிரபலங்கள் வாழ்த்து!

சென்னை: சிவகார்த்திகேயனின் டாக்டர் படம் இன்று ரிலீஸ் ஆவதை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Recommended Video

Doctor Audience Opinion | BMW carல் கெத்தாக வந்து இறங்கிய Sivakarthikeyan

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் கடைசியாக 2019ஆம் ஆண்டு ஹீரோ படம் வெளியானது.

அதன்பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை. அடுத்தடுத்து படங்களில் நடித்த போதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக சிவகார்த்திகேயனின் படங்கள் ரிலீஸ் ஆகாமல் இருந்தது.

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன்

இந்நிலையில் கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் டாக்டர் படத்தில் நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்தப் படத்தில் ப்ரியங்கா அருள் மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். வில்லனாக வினய் நடித்துள்ளார். மேலும் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

இன்று தியேட்டரில் ரிலீஸ்

இன்று தியேட்டரில் ரிலீஸ்

இந்தப் படம் கடந்த மார்ச் மாதமே ரிலீஸ் ஆகியிருக்க வேண்டும். ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போனது. படத்தை ஓடிடியில் வெளியிட தயாரிப்பாளர்கள் முயற்சி செய்தனர். ஆனால் அந்த முயற்சி கைகொடுக்கவில்லை. இந்நிலையில் டாக்டர் படம் இன்று தியேட்டரில் ரிலீஸ் ஆகியுள்ளது.

யாரும் தேவன் கை பொம்மைகளே

யாரும் தேவன் கை பொம்மைகளே

இதனை முன்னிட்டு நடிகர் சிவகார்த்திகேயன் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, நாளை என்றும் நம் கையில் இல்லை நாம் யாரும் தேவன் கை பொம்மைகளே என்றால் கூட போராடு நண்பா என்றைக்கும் தோற்காது உண்மைகளே..எதிர் நீச்சலடி வென்று ஏற்று கொடி.. டாக்டர் படம் இன்று முதல் தியேட்டர்களில்.. நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கண்டு மகிழுங்கள் என பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யா வாழ்த்து

நடிகர் சூர்யா வாழ்த்து

சிவகார்த்திகேயனின் இந்த பதிவை பார்த்த நடிகர் சூர்யா இன்று ரிலீஸ் ஆகும் டாக்டர் படத்திற்கு என் வாழ்த்துகள் என டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் இயக்குநர் சீனு ராமசாமியும் தனது டிவிட்டர் பக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் படக்குழுவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X