Actor Suriya: லியோ பாணியில் பிரம்மாண்ட இன்ட்ரோ சாங்.. க்ளோனிங் தொழில்நுட்பத்தில் கங்குவா டீம் மாஸ்!
சென்னை: நடிகர் சூர்யாவின் கங்குவா படத்தின் சூட்டிங் நிறைவடைந்துள்ளது. சூர்யா மற்றும் பாபி தியோல் ஆகியோரின் போர்ஷன்கள் முற்றிலும் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சில தினங்கள் பேட்ச் வேலைகள் மீதமுள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, சென்னை, கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதி மற்றும் தாய்லாந்து போன்ற இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வரலாற்றுப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கு அதிகமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில், தற்போது படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
சூர்யாவின் கேரியரில் மிகவும் பிரம்மாண்டமாக கங்குவா படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தின் போஸ்டர்கள் உள்ளிட்டவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் இரண்டாவது போஸ்டரும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளன. படத்தில் VFX காட்சிகள் ஹாலிவுட் தரத்தில் அமைந்துள்ளதாக படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்தப் படத்தின் ரிலீசுக்காக ரசிகர்கள் அதிகமான எதிர்பார்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த கதைத் தேர்வுகள் ரசிகர்களை மிகவும் அதிகமாக கவர்ந்து வருகின்றன. தொடர்ந்து ஜெய்பீம், சூரரை போற்று போன்ற கதைக்களங்களில் நடித்துவந்த சூர்யா, தற்போது வரலாற்று பின்னணியில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பலவிதமான கெட்டப்புகளில் அவர் நடித்துவருவதாக கூறப்பட்டுள்ளது. தொடர்ந்து அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்ட நடிகர்களை கொண்டு கமர்ஷியல் சக்சஸ் கொடுத்துவந்த இயக்குநர் சிவா இந்தப் படத்தை இயக்கி வருகிறார். படத்தில் சூர்யா, பாபி தியோல் ஆகியோரின் போர்ஷன்கள் எடுத்து முடிக்கப்பட்டுள்ளன.
சூட்டிங் நிறைவு: இந்நிலையில் இன்னும் சில தினங்கள் படத்தின் பேட்ச் வொர்க் வேலைகள் நடந்து, அத்துடன் படத்தின் ஒட்டுமொத்த சூட்டிங்கும் நிறைவடையவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனிடையே மறுபுறம் படத்தின் VFX வேலைகளுடன் ஜரூராக நடந்து வருகின்றன. தற்போது இந்தப் படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துவிட்டு தன்னுடைய சூர்யா43 படத்தில் நடிகர் சூர்யா கவனம் செலுத்திவருகிறார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகவுள்ள இந்தப் படத்தின் சூட்டிங்கில் விரைவில் அவர் இணையவுள்ளார். சூர்யா கேரியரில் இதுவரை இல்லாத வகையில் மிகவும் பிரம்மாண்டமாக கங்குவா படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பிரம்மாண்டமான உருவாக்கம்: அதிகமான பட்ஜெட்டிலும் உருவாகியுள்ள கங்குவா படத்தின் ரிலீசுக்கு முந்தைய வியாபாரமும் பல கோடிகளை தயாரிப்பு தரப்பிற்கு வசூலித்து கொடுத்துள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் VFX காட்சிகள் அல்ட்டிமேட்டாக அமைந்துள்ளதாக சில காட்சிகளை பார்த்த தன்னுடைய நண்பர்கள் தெரிவித்ததாக வலைப்பேச்சு அந்தணன் தன்னுடைய சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். இந்தப் படத்தில் ரசிகர்கள் எதிர்பார்க்காத அளவில் VFX காட்சிகளை சிவா உருவாக்கி வருவதாகவும் இந்தப் படம் வெளியானவுடன் அவரது மார்க்கெட் அதிக உயரத்திற்கு செல்லும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சூர்யாவின் இன்ட்ரோ பாடல்: இதனிடையே இந்தப் படத்தில் சூர்யாவின் இன்ட்ரோ பாடலும் மிகப்பெரிய அளவில் உருவாக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். விஜய்யின் லியோ படத்தில் 2000 பேர் ஆடும்வகையில் அவரது இன்ட்ரோ பாடல் அமைந்தது. இந்த விவகாரம் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. சம்பளம் கொடுக்கப்படவில்லை என்றும் கூறப்பட்டது. இந்நிலையில் கங்குவா படத்திலும் இதுபோன்ற பிரம்மாண்ட பாடல் சூர்யாவின் இன்ட்ரோ பாடலாக அமைந்துள்ளதாகவும் ஆனால் இதுபோன்ற ரிஸ்க்கை படக்குழு எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 100 தேர்ந்தெடுத்த டான்சர்களை வைத்து இந்தப் பாடல் படமாக்கப்பட்டுள்ளதாகவும் அந்தணன் தெரிவித்துள்ளார்.
இமேஜ் க்ளோனிங் தொழில்நுட்பம்: அவர்களை கொண்டு பாடல் எடுக்கப்பட்டு அவர்களை இமேஜ் க்ளோனிங் தொழில்நுட்பத்தில் 2000 டான்சர்களாக கங்குவா டீம் உருவாக்கியுள்ளதாகவும் அந்தணன் குறிப்பிட்டுள்ளார். இந்தப் பாடல் பட்டையை கிளப்பும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத்தின் இசை கூடுதல் பலமாக அமைந்துள்ள நிலையில் இந்த இன்ட்ரோ பாடலுக்கு ஆர்ஆர்ஆர் படத்தின் கொரியோகிராபர் பிரேம் ரக்ஷித் நடனம் அமைத்துள்ளதும் பாடலுக்கான எதிர்பார்ப்பை எகிற செய்துள்ளது.


Click it and Unblock the Notifications











