Actor Suriya: பாலிவுட் வில்லனை வியக்க வைத்த கங்குவா பட செட் .. அட அப்படியா!

சென்னை: நடிகர் சூர்யாவின் 42வது படமாக உருவாகி வரும் கங்குவா படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. இந்தப் படத்தின் சில பேட்ச் வொர்க்குகள் மட்டுமே தற்போது படமாக்கப்பட்டு வருகின்றன. சூர்யாவிற்கு இந்தப் படத்தில் திஷா பதானி ஜோடியாகியுள்ளார். இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. படத்தின் சில பேட்ச் வேலைகளை தற்போது படக்குழுவினர் மேற்கொண்டுள்ளனர். இதில் சூர்யா, படத்தின் வில்லன் பாபி தியோல் உள்ளிட்டவர்கள் இணைந்துள்ளனர்.

சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு இந்தப் படத்தின் சூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த சூட்டிங்கில் பாபி தியோல் பங்கேற்று வருகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகிவரும் இந்தப் படத்தின் சூட்டிங் தாய்லாந்து, சென்னை மற்றும் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப் பகுதிகளில் நடந்துள்ள நிலையில் தற்போது படத்தின் பேட்ச் வேலை சென்னையில் பிரம்மாண்டமான செட் போடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் படத்தின் சூட்டிங் நிறைவடையவுள்ளது..

Actor Suriyas Kanguva movie shooting happening in Chennai with mass set

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கேரியரிலேயே மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது கங்குவா. இந்தப் படத்தை இயக்குநர் சிவா இயக்கி வருகிறார். வரலாற்று பின்னணியில் இந்தப் படத்தின் சூட்டிங் கோவா, தாய்லாந்து, சென்னை மற்றும் கொடைக்கானலின் அடர்ந்த காட்டுப்பகுதிகளில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. படத்தில் சூர்யாவிற்கு திஷா பதானி ஜோடியாகியுள்ளார். சூர்யா -திஷா பதானி காம்பினேஷனில் இந்தப் படத்தின் பாடல்காட்சிகள் கோவாவில் முன்னதாக படமாக்கப்பட்டன.

பிரம்மாண்ட கப்பல் செட்: இந்தப் படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். படம் மிகவும் பிர்ம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ள நிலையில் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய நிறைவடைந்துள்ளது. சில பேட்ச் வேலைகளை சென்னையில் படக்குழு படமாக்கி வருகிறது. இதற்காக ஈவிபியில் பிரம்மாண்டமான கப்பல் செட் போடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் இந்தக் கப்பல் வில்லன் பாபி தியோலின் உலகமாக காட்டப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தப் படத்தின் சூட்டிங்கில் இணைந்துள்ள பாலிவுட் நடிகர் பாபி தியோல், தமிழ் திரையுலகின் மேக்கிங்கில் மலைத்து போயுள்ளாராம்.

மிரண்ட பாபி தியோல்: லிவுட்டில் படங்களின் சூட்டிங் தாமதமாக துவங்கப்படும் நிலையில், கோலிவுட்டில் காலை 7 மணிக்கே சூட்டிங் துவங்கப்படுவது அவருக்கு ஆச்சர்யத்தை அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் கோடை கொண்டாட்டமாக வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆகஸ்ட் மாதத்திற்கு படத்தின் ரிலீஸ் தள்ளிப் போகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தின் VFX பணிகள் அதிக காலத்தை எடுக்கும் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மிரட்டிய கிளிம்ப்ஸ் வீடியோ: ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தை தயாரித்து வருகிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகவுள்ள இந்தப் படத்தில் சூர்யா, வித்தியாசமான தோற்றங்களில் நடித்து வருகிறார். முன்னதாக சூர்யாவின் பிறந்தநாளையொட்டி இந்தப் படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிகமாக கவர்ந்தது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இந்த வீடியோ வெளியானது. படத்தில் யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, கோவை சரளா உள்ளிட்டவர்களும் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகின்றனர்.

சூர்யா -சுதா கொங்கரா காம்பினேஷன்: அடுத்ததாக சுதா கொங்கரா படத்தில் கமிட்டாகியுள்ளார் சூர்யா. இந்தப் படத்திற்கு புறநானூறு என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தின் டைட்டில் தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ளதாக, மாற்றப்படலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கல்லூரி மாணவனாக சூர்யா நடிக்கவுள்ள நிலையில், இந்தப் படம் பீரியட் படமாக வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் சூர்யாவுடன் இணைந்து நடிக்கவுள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X